Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Thursday, 3 November 2022

வி.கே புரடக்க்ஷன் வழங்கும் #மாவீரா படத்தின் இரண்டாவது பாடலுக்கான பாடலும் மெட்டமைக்கும் பணியும் நடைபெற்றது.

 வி.கே புரடக்க்ஷன் வழங்கும்

#மாவீரா படத்தின் 

இரண்டாவது பாடலுக்கான

பாடலும் மெட்டமைக்கும்

பணியும் நடைபெற்றது.

கவிப்பேரரசரின் புலமையும்

ஜிவி பிரகாசின் அழகிசையும்

காலமுள்ளவரை ஒலிக்கும்.



பத்தே நிமிடத்தில்

பாட்டு தயரானது.


பட்டாம்பூச்சிக்கு

பட்டுத்துணி போட்டது போல

சிட்டாஞ்சிட்டுக்கு சேலைக் கட்டி

விட்டது யாரு? 

சீனிக்கட்டியில  செலை ஒன்னு

செஞ்சு வச்சது போல 

எட்டா ஒயரத்தில் எச்சி ஊற 

விட்டது யாரு? 


வன்னித் தமிழா வாய்யா

உனக்கு வாச்சப் பொருளைத் தாயா 

பச்ச முத்தம் ஒன்னு கொடுத்தா 

பற்றிக் கொள்வேன் தீயா 


அடி வஞ்சிக்கொடியே வாடி 

வளர்த்த பொருளத்தாடி

பாசத்த உள்ள வச்சுப்

பாசாங்க வெளிய வச்சு

வேசங்கட்டி வந்தவளே

வெறும்வாய மெல்லுறியே


மாவீரன் மண் காக்க

மானமுள்ள பெண் காக்க

அஞ்சாறுப் புலிக்குட்டி

அவசரமா வேணுமடி.


இன்னும் இன்னும் திகட்ட 

இப்படி நீள்கிறது பாடல்...


மாவீரா மாபெரும் வெற்றி

என்பதை இரண்டாவது

பாடலும் உறுதிபடுத்தியது.

பேராளுமைகள் இருவருக்கும்

நெகிழ்ந்த நன்றிகள்.


- வ. கௌதமன்

No comments:

Post a Comment