Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Sunday, 15 January 2023

மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் என்னை நடிக்க வைத்த தங்கர்பச்சான்

 மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் என்னை நடிக்க வைத்த தங்கர்பச்சான் சாருக்கு நன்றி - நடிகர் யோகிபாபு


அனைவருக்கும் வணக்கம். 

"கருமேகங்கள் கலைகின்றன" படத்தின் என்னுடைய காட்சிகள் முடிவடைந்தன. இயக்குனர் ஜாம்பவான் பாரதிராஜா சார், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சார், அதிதி பாலன் மற்றும் பல கலைஞர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருடனும் நடித்தது மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. ஏனென்றால், அனைவருமே மேதைகள். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் தங்கர்பச்சான் சார் தான். நாம் மறந்த வாழ்க்கையெய்  நினைவிற்கு கொண்டு வருபவர் தங்கர் பச்சான் சார். 

பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அழகி, சொல்ல மறந்த கதை, அப்பாசாமி போன்ற அவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றி பெற்ற படங்கள் தான்.




 இந்த முறையில் எங்களை வைத்து ஒரு குடும்ப கதை எடுத்திருக்கிறார். அவருடன் பயணித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்தடுத்து பயணிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. வேகமாக, அதே நேரத்தில் கோபமாகவும் பணியாற்றுவார். அப்பதான் வேலைகள் கரெக்டாக நடக்கிறது. ஆனால், மற்ற நேரத்தில் எல்லோருடனும் மகிழ்ச்சியாகவும் இருப்பார். அவருடன் பணியாற்றியதில் நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது.


படத்தின் இசையை ஜிவி பிரகாஷ் அமைத்திருக்கிறார். வைரமுத்து சார் பாடல்கள் எழுதியிருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு ஜாம்பவான் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 


குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக சாரல் என்ற பெண் குழந்தை நடித்திருக்கிறார். அந்தப் பெண்ணை சுற்றி தான் படத்தின் கதை இருக்கும். படத்தின் இறுதிவரை எனது பாத்திரம் நகைச்சுவையாகத் தான் இருக்கும்.


இது போன்ற நல்ல நல்ல கதைகளோடும், நல்ல குழுக்களோடும் நடிப்பதற்கு சந்தோஷமாக தான் இருக்கிறது. மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் என்னை நடிக்க வைத்த தங்கர்பச்சான் சாருக்கு நன்றி.


அனைவருக்கும் "கருமேகங்கள் கலைகின்றன" குழு சார்பாக பொங்கல் நல் வாழ்த்துக்கள். 


-- ஜான்சன்.

No comments:

Post a Comment