Featured post

Dude Movie Review

Dude Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம dude படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது keerthiswaran .  Pradee...

Saturday, 5 August 2023

33 வருட திரையுலக அடையாளம்,தங்கர் பச்சான்

33 வருட திரையுலக அடையாளம்,தங்கர் பச்சான்


தலைசிறந்த ஒளிப்பதிவாளராக, எழுத்தாளராக, இயக்குனராக என  தங்கர் பச்சானின் கடந்த 33 வருட பாரம்பரிய திரைப்பயணம் என்பது தமிழ் சினிமாவின் மதிப்பை அதிகளவில் உயர்த்தவே செய்துள்ளது. 







புதுமையான, வித்தியாசமான காட்சி கலவைகள் மூலம் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டது,  மனதை தொடும் நிஜ வாழ்வியல் கதைகளை எழுதியது மற்றும் ஒரு படைப்பாளியாக மகத்தான படைப்புகளை கொடுத்தது என நல்ல சினிமாவின் அடையாள சின்னமாகவே மாறியிருக்கிறார், தங்கர் பச்சான்.


அவரது படங்கள் ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையையும் சினிமாவில் பிரதிபலிப்பதால் அவர்கள் அனைவரையும் தன்னுடன் தொடர்புபடுத்திக் கொள்ள தவறியதே இல்லை. சினிமா காதலர்களுக்கு அழகிய திரைப்படங்களை பரிசளிப்பதற்காக பல்துறை வித்தகரான தங்கர் பச்சான் தனது கனவுகளையும் ஆசைகளையும் சாதிக்க மென்மேலும் முயன்று வருகிறார்.

No comments:

Post a Comment