Featured post

Indian Basketball Federation President Aadhav Arjuna has said that the 3x3

 *Indian Basketball Federation President Aadhav Arjuna has said that the 3x3 Senior National Championship Men & Woman 2023 will be held ...

Tuesday, 29 August 2023

லக்கிமேன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

 *‘லக்கிமேன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லக்கிமேன்’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று (29.08.2023) நடைபெற்றது. 










நடிகர் அப்துல் பேசியதாவது, ’’தீரா காதல்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி நன்றாக எழுதி இருந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கும் நன்றி” என்றார். 


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது, “பாலாஜி அண்ணனை சிறு வயதில் இருந்தே எனக்குத் தெரியும். இந்த காலத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அவர்களில் யோகிபாபுவும் ஒருவர். ‘லக்கிமேன்’ போன்ற கதைக்களம் எனக்கு பெரும் சவாலாக இருந்தது. வாய்ப்பு கொடுத்த பாலாஜி அண்ணனுக்கு நன்றி. யோகிபாபு சார் நடிப்பை படத்தில் ரசித்துப் பார்த்தேன். இது மிகப்பெரிய விஷயம். மிகப்பெரிய புகழ் அவர் அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன். ஃபீல்குட் படங்களின் வரிசையில் கண்டிப்பாக ‘லக்கிமேன்’ இருக்கும். பாடல்களில் பாலாஜி நிறைய இன்புட்ஸ் கொடுத்தார். என்னுடைய குழுவுக்கும் நன்றி. சக்திவேல் சார் படத்தை எடுத்தால் அதை பார்வையாளர்கள் நம்புகிறார்கள். அது மிகப்பெரிய பலம். உறுதுணையாக இருக்கும் சக்தி சாருக்கு நன்றி”.


எடிட்டர் மதன் பேசியதாவது, “இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல். நான் நிறைய ஹாரர், த்ரில்லர் படங்களில் வேலை செய்திருக்கிறேன். எனக்கு ஃபீல்குட் படங்களில் வேலை பார்க்க வேண்டும் என்பதும் விருப்பம். அது இந்தப் படம் மூலம் நிறைவேறி உள்ளது. இயக்குநர் பாலாஜி சாருக்கும் நன்றி. மியூசிக் டைரக்டர் ஷானுக்கு நன்றி. என்னுடன் பேசி கலந்துதான் அவரும் வேலை செய்தார். எனக்கும் அது வேலையை எளிதாக்கி கொடுத்தது. இந்தக் கதையில் யோகிபாபு சார் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அவரைதான் இயக்குநரும் உறுதி செய்துள்ளார். வசனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். யார் பார்த்தாலும் இந்தப் படத்தை கனெக்ட் செய்து கொள்வார்கள். நடிகர்கள் எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். அனைவருக்கும் நன்றி”.


நிகழ்வில் நடிகை சுஹாசினி குமரன் பேசியதாவது, “இந்த வாய்ப்பு கொடுத்த பாலாஜி அண்ணாவுக்கு நன்றி. இந்தப் படத்தில் நான் கடைசியாகதான் இணைந்தேன். படத்தில் பெரிய நடிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் நடிப்பு எனக்கு பிடிக்கும். இதில் நானும் இருப்பது மகிழ்ச்சி”.


குழந்தை நட்சத்திரம் சாத்விக், “படப்பிடிப்பு போனது போலவே இல்லை! ஜாலியாகவே இருந்தது. யோகிபாபு, ரேச்சல் அக்காவுக்கு நன்றி”.


நடிகர் வீரா பேசியதாவது, “படக்குழுவில் பாசிட்டிவாக ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யோகிபாபு, ரேச்சல் அனைவருக்கும் வாழ்த்துகள். யோகிபாபுவின் அனைத்து படங்களுமே பார்த்து நான் ரசிகனானேன். அவருடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. கடின உழைப்பாளி அவர். உடல் நலனை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் தலைவா”.


காஸ்ட்யூம் டிசைனர் நந்தினி நெடுமாறன், “தனிப்பட்ட முறையில் இது என்னுடைய முதல் படம். என் மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.


நடிகை ரேச்சல், “இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் வேணுகோபால், யோகிபாபு சார், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்”.


சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், “இது மிகவும் அருமையான படம். இந்தப் படம் பார்க்கும்போது ‘குட்நைட்’ பார்ப்பது போல இருந்தது என பலரும் சொன்னார்கள். என்னைக் கேட்டால், யோகிபாபு சாருக்கு ‘மண்டேலா’வுக்கு பிறகு ‘லக்கிமேன்’ என சொல்வேன். சிறந்த நடிகர் அவர். பாலாஜி வேணுகோபால் சார் சிறந்த இயக்குநர். படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். படத்திற்கு ஆதரவு தாருங்கள்”.



இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசியதாவது, “இதற்கு முன்பு நான் ‘பானிபூரி’ என்ற குறுந்தொடர் இயக்கி  இருந்தேன். அதற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யோகிபாபுவை பார்த்து கதை சொன்னதும் அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அவர் வாழ்க்கையை திரும்பி பார்ப்பது போல உள்ளது என உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். அவரை தமிழ் நடிகர் என சொல்வது குறைவு. இந்திய நடிகர் என சொல்லும் அளவுக்கு திறமையானவர். அவரைப் பற்றிய பல தவறான புரிதல்கள் நிச்சயம் நீங்க வேண்டும். அவர் வீட்டில் ஒருவருக்கு மெடிக்கல் எமர்ஜென்சி எனும் போது கூட ஷூட்டிங் வீணாகக் கூடாது என அந்த கஷ்டத்தை மறைத்து எங்களுக்கு நடித்துக் கொடுத்தார். என்னுடைய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. அவர்கள் எனக்கு உதவிய இயக்குநர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் மட்டுமில்லாது தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றினர். ஷான் ரோல்டன் என்றாலே ட்யூன் தான். சிறப்பாக செய்துள்ளார். சுஹாசினி சின்ன ரோலாக இருந்தாலும் எனக்காக நடித்துள்ளார். படத்தை வெளியிடும் சக்தி சாருக்கு நன்றி. நண்பர்கள், குடும்பத்தினர் கொடுத்த ஆதரவுக்கு நன்றி”.


நடிகர் யோகிபாபு, “இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் பாலாஜி சொன்னது போல என்னுடைய வாழ்வை திரும்பி பார்ப்பது போலதான் இருந்தது. இதற்கு முன்பு நான் நடித்த சில படங்களில் நாலஞ்சு சீன் என்னை வைத்து எடுத்து விட்டு ஏன் போஸ்டர் போடுகிறீர்கள் எனக் கேட்டேன். அது ரசிகர்களையும் ஏமாற்றுவது போலதானே? அதைக் கேட்டால்தான் அனைவருக்கும் பிரச்சினை. நான் ஷூட்டிங் வரமால் எங்கு போவேன்? என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் சும்மா. நான் கதை கேட்டு படம் பண்ணுவதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டுதான் படம் செய்வேன். படம் ரொம்பவே பிடித்து நடித்தோம். படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருமே சிறப்பாக செய்துள்ளனர்” என்றார்.

No comments:

Post a Comment