Featured post

Thalapathy Vijay’s Much-Awaited Film "Thalapathy 69" Begins Shooting

 *Thalapathy Vijay’s Much-Awaited Film "Thalapathy 69" Begins Shooting with Grand Pooja Ceremony* KVN Productions, known for deliv...

Tuesday 4 September 2018

நடிகர் சங்கத்துக்கு கேரளா முதல்வர்

  • நடிகர் சங்கத்துக்கு கேரளா முதல்வர் பாராட்டும் நன்றியும் !


    சமீபத்தில் கேரள மாநிலத்தில் வெள்ள பெருக்காலும் மண் சரிவினாலும் கடும் சேதம்  ஏற்பட்டு மக்கள் பெரும் துயரத்தையும் உயிரிழப்புகளையும் சந்தித்தனர். இதிலிருந்து மக்களை மீட்டு அம்மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர நிதி உதவி அளிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை நேரடியாக 
  • அனுப்பிவைக்குமாறு நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைத்து திரைத்துறையினிடமும் வேண்டுகோள் வைத்தார். முதல் கட்டமாக நடிகர் சங்கம்  சார்பில்  ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தது . இதனை தொடர்ந்து நடிகர் நடிகைகள் மற்றும் திரைத்துறையினர் அனைவரும் பெரும் தொகைகள் நிதி உதவியாக  அளித்து வருகின்றனர் .நடிகர் சாங்த்தின் ஒத்துழைப்புக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து கேரளா முதல்வர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசருக்கு கடிதம் 
  • அனுப்பியுள்ளார்.மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க அரசு எல்லா நடவடிக்கைகளையும் வேகமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .

No comments:

Post a Comment