Featured post

Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 .

 Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 . திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான திரு  N.L.Sri இயக்கும் இரண்டாவது படம...

Friday, 14 September 2018

வால்டர் யு.அன்பரசன் இயக்குகிறார்

அர்ஜுன் விக்ரம்பிரபு ஜாக்கி ஷெராப் நடிக்கும் ஆக்‌ஷன் படம் 

                          "வால்டர்" யு.அன்பரசன் இயக்குகிறார்

மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக சிங்காரவேலன் தற்போது கிருஷ்ணா நடிக்க சத்யசிவா இயக்கத்தில் கழுகு படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வெளிவர உள்ள இப்படத்தைத் தொடர்ந்து அதிக பொருட் செலவில் 

 வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாக உள்ள "வால்டர்" என்ற படத்தையும் இந்த நிறுவனம் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் அர்ஜுன் விக்ரம் பிரபு ஜாக்கி ஷெராப் ஆகிய மூவரும் மூன்று விதமான கதாநாயகன் வேடம் ஏற்கிறார்கள். கதாநாயகி உட்பட மற்ற நட்சத்திரங்கள் பின்னர் அறிவிக்கப் படும்.

ஒளிப்பதிவு  -   சதீஷ்குமார் 
இசை -    அர்ஜூன் ரெட்டி படப் புகழ்  ரதன் இசையமக்கிறார்
எடிட்டிங்  -   கோபிகிருஷ்ணா
கலை  -   A.R.மோகன் 
நடனம்  -  தஸ்தா, ஷெரிப்
சண்டை பயிற்சி  -    விக்கி
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் U.அன்பரசன். இவர் இயக்கும் முதல் படம் இது
தயாரிப்பு  -   சிங்காரவேலன்

படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கி  மதுரை கும்பகோணம் தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது. அதிரடி ஆக்‌ஷன் படமாக வால்டர் படம் உருவாகிறது.

No comments:

Post a Comment