Featured post

Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event

 *Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event !* Vishnu Vishal’s “Aaryan” Gears Up for Release on October 31 with a Sp...

Wednesday, 5 September 2018

எம்.ஜி.ஆர் படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா

எம்.ஜி.ஆர் படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில்  திரைப்படமாக  தயாரித்து வெளியிட்ட  ரமணா 






கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம்  எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை  “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.


 

எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் 



பந்துளுவாகY.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர்.


அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது..


விழாவில் முன்னாள் அமைச்சர் H.V.ஹண்டே, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பி.வேணுகோபால், டாக்டர் 



பழனிபெரியசாமி, சத்யபாமா கல்லூரி துணைவேந்தர் லீனா மரியா ஜான்சன், கவிஞர் பூவை செங்குட்டுவன், நடிகை லதா, மக்கள் குரல் ஆசிரியர் ஆர்.முத்துகுமார், துரைகருணா, இயக்குனர் ஆதவன், எம்.ஜி.ஆராக நடித்துள்ள சதீஷ், பாலாசிங், மாஸ்டர் அத்வைத் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


இந்த படத்தின் டிரைலரை H.V.ஹண்டே வெளியிட சைதை துரைசாமி பெற்றுக்கொண்டார். விழாவிற்கு வருகைதந்த அனைவரையும் படத்தின் இயக்குனர் அ.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

No comments:

Post a Comment