கூத்தன் இசை வெளியீட்டு விழா
நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும்கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் பத்திரைக்கையாளர்கள்மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் இன்று மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சிகரம் கே. பாக்யராஜ் அவர்கள், ஜாக்குவார்தங்கம் அவர்கள், நடிகை அர்ச்சனா, நடிகை நமீதா, நடிகை நிகிஷா பட்டேல், மற்றும் பலபிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய இசை வெளியீட்டில் பேசிய
பிரபலங்கள் படத்தை வெகுவாக பாராட்டினர்.
இசை வெளியீட்டு விழா மேடையிலேயே
புதிதான முறையில் டிக்கெட் விற்பனை முறையை அறிமுகப்படுத்திப் பேசிய தயாரிப்பாளர்நீல்கிரிஸ் முருகன்
ஒரு மிகப்பெரும் பிரமாண்ட படத்தின் மூலம் என் மகனை அறிமுகப்படுத்தி ரசிகரகளைபிரமாண்டமான படம் பார்க்கும் உணர்வை தர நினைத்து இந்தப்படம் தயாரித்துள்ளேன். எந்தவிசயத்திலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவன் நான். தமிழ் நாட்டில் சின்ன படங்கள் ஓடுவது மிகப்பெரும் விசயமாகிவிட்டது. அதை மாற்றி இந்தப்படத்தைஅனைவரிடமும் கொண்டு செல்லவும், இதை வெற்றிப்படமாக்கவும் டிக்கெட் முறையில் புதுமுறையை அறிமுகப்படுத்த உள்ளேன். ஒரு புதிய ஐடியாவாக படத்தின் டிக்கெட்டை நானே என்நண்பர்கள் மூலமாகவும் என் நலம் விரும்பிகள் மூலம் இந்த டிக்கெட்டை விற்பனை செய்யஉள்ளேன். இதறகு எனது நண்பர்கள் அனைவரும் ஒத்துழைக்கிறார்கள். இந்த டிக்கெட்டைகொண்டு நீங்கள் தியேட்டர் சென்றால் ஒன்பது நாட்களில் எந்த தியேட்டர் செல்கிறீர்களோ அந்ததியேட்டரின் இந்தப்பட டிக்கெட்டை தருவார்கள். டிக்கெட் நீங்கள் தமிழ் நாட்டில் எங்குவாங்கினாலும் எந்த விலைக்கு வாங்கினாலும் அதிக டிக்கெட் விலையுள்ள தியேட்டருக்குநீங்கள் சென்றாலும் இந்த டிக்கெட் செல்லும். தியேட்டர்கள் ஒத்துழைப்புடன் இதைஆரம்பித்திருக்கிறேன். ஒரு சின்னப்படத்தை 5 லட்சம் பேர் பார்த்தால் அது ஹிட் படம். இந்தமேடையிலேயே என் நண்பர்கள் மூலம் 20 லட்சம் ரூபாய் அளவு டிக்கெட்டை விற்கிறேன். இதைஅவர்கள் சந்தைப்படுத்துவார்கள் . ஒவ்வொரு கட்டமாக இதை நடைமுறைப்படுத்துவேன். இதன்மூலம் பார்வையாளர்களை நேரடியாக நாங்கள் சந்தித்து தியேட்டருக்கு அழைத்து வருவோம்மேலும் படத்தையும் மிகப்பெரிய ஹிட் படமாக ஆக்குவேன். படத்தின் இசை விழாவிலேபடத்தின் விற்பனை தொடங்கி விட்டது. இந்த முறை எல்லோராலும் இனி பின்பற்றப்படும்என்றார். இது எல்லோரிடமும் பாரட்டை பெற்றதுடன் பரபரப்பையும் உண்டாக்கியது.
இதை அடுத்து பேசிய பிரபலங்கள் இத்திட்டத்தினை வெகுவாக பராட்டினர்.
ஹீரோ ராஜ்குமார் பேசியது
இந்தப்படத்தின் டைட்டிலே இயக்குனர் அவர் மனைவியிடம் கேட்டு கூத்தன் என அற்புதமானடைட்டிலாக வைத்தார். இந்தப்படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படத்தில்பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். இந்த வாய்ப்பு என் தந்தையால் கிடைத்தது இதில்நான் என்னால் முடிந்த அளவிலான உழைப்பை தந்திருக்கிறேன். உங்களுடைய ஆசிர்வாதம்வேண்டும். எனக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.
நடிகை நமீதா பேசியது
மேலாளர் மனோஜ் தான் நான் இங்கு வரக்காரணம். என் வாழ்க்கையில் கொஞ்சம் வெற்றிவரக்காரணம் அவர் தான். அவர் தான் தமிழில் பேசுங்கள் என்று உற்சாகப்படுத்தினார். மச்சாவேர்ட் உருவானது அப்படித்தான். ஹிரோ ராஜ் நீங்கள் மனோஜ் மூலம் அறிமுகமாகிறீர்கள்கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள். தண்ணியில் குதித்து விட்டதால் நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள்.திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். எல்லோருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
கே பாக்யராஜ் பேசியது
நான் உள்ளே வரும்போது டீ ஆர் உணர்ச்சி பொங்க பாடிக்கொண்டிருந்தார். அவர் மேடைகளில்உணர்ச்சி வசமாக பேசிவிடுவதால் இங்கு வரவில்லை என்றார்கள். அதுவும் சரிதான். நான் இந்தமாதிரியான கதையை அடிப்படையாக வைத்து ஒரு கதையை யோசித்து வைத்திருந்தேன்.ஆனால் இந்தப்படத்தை அவர்கள் அற்புதமாக எடுத்திருக்கிறார்கள்.
டான்ஸ் சம்மந்தமான நாகேந்திர பிரசாத் இதில் நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் ஒருபேக்கரியில் வேலை பார்த்து இந்த அளவு முன்னேறியிருக்கிறார். எல்லாவற்றிலும் மிகுந்ததிட்டமிடலுடன் இயங்குகிறார். இசை மேடையிலேயே வியாபாரத்தை தொடங்கிவிட்டார்.இதற்கு அவர் நண்பர்களுக்குத்தான் அவர் நன்றி சொல்ல வேண்டும். நாயகன் புதியவர் போல்இல்லாமல் அதிகமாக உழைத்திருக்கிறார். திட்டமிடலுன் இயங்கும் இக்குழு கண்டிப்பாகவெற்றிபெறும் என்று பேசினார்.
ஆர் கே செல்வமணி பேசியது
இந்தப்படத்தின் இயக்குநர் வெங்கியை முப்பது வருடமாக தெரியும். அவர் அப்போதே ஜீனியஸ்.எங்களுக்கே தெரியாத பல விசயங்கள் அவருக்கு தெரியும். இயக்குநர் தயாரிப்பாளருக்குசண்டை வராதபடங்கள்
என்னைப் பொருத்த வரை விளங்காது.
என்னுடைய புலன் விசாரணை. படத்தில் ரிலீஸின் போது என்னை அலுவலக ரோட்டிலேயேவரக்கூடாது என்றார் என் தயாரிப்பாளர். ஆனால் பட ரிலீஸுற்கு பின் என்னை கூப்பிட்டுபாராட்டினார். அது போல் இந்தப்படத்திலும் எதாவது மனத்தாங்கல் இருந்தால் பட ஹிட்டுக்குபிறகு நீங்கள் இணைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நாயகனின் கண்கள்விஜயகாந்தைப் போல் உள்ளது. அவர் போல் இவரும் மிகப்பெரும் இடத்தை அடைவார்.எல்லோருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
No comments:
Post a Comment