Featured post

Thalapathy Vijay’s Much-Awaited Film "Thalapathy 69" Begins Shooting

 *Thalapathy Vijay’s Much-Awaited Film "Thalapathy 69" Begins Shooting with Grand Pooja Ceremony* KVN Productions, known for deliv...

Monday 10 September 2018

Pariyerum Perumal Press Meet

யாரையும் எதிர்த்து நிற்பது என் நோக்கமல்ல,
அனைவருடனும் கைகோர்த்து உரையாடவே நான் விரும்புகிறேன்.
இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு

"பரியேறும் பெருமாள்" பணமும் குவிக்கும், மரியாதையும் பெறும்.
இயக்குநர் ராம் பேச்சு.

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்  தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும்பெருமாள்”.  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  இயக்குநர் ராம்"பரியேறும் பெருமாள்" இயக்குநர் மாரி செல்வராஜ்இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்நடிகர் கதிர்நடிகை கயல்ஆனந்திநகைச்சுவை நடிகர் யோகிபாபுலிஜீஸ்ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்எடிட்டர் செல்வா ஆர்.கே., கலைஇயக்குநர் ராமுசண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்...

 



 
















 



 


 












 
















 


 



ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்குமுன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனிதசமூகத்தினையுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. எனக்கு அம்பேத்கரின் துயரமானநாட்கள் தான் எப்போதும் நினைவில் இருக்கும். அவர் ஒரு விசயத்தை வேதனையோடு சொன்னார். நான்கஷ்டப்பட்டு ஒருதேரை இழுத்து வந்து 
ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன். தயவுசெய்து அதைப்பின்னோக்கி இழுத்து விடாதீர்கள் என்று சொன்னார். நிச்சயமாக அந்தத் தேரை நான் முன்னோக்கி இழுத்துச்செல்வேன். அதற்கான ஆரம்பம் தான் இந்தப் பரியேறும் பெருமாள் படம். எனக்கிருக்கிற வாய்ப்புகளில்தொடர்ந்து மனித சமூகத்திற்கு இடையே உள்ள 
முரண்களை முரணை உடைக்கிற வேலையை செய்வேன். இதனால் என் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களையும் தாண்டி, சில வேலைகளை செய்யவேண்டியிருக்கிறது. இந்தப் படம் உருவாவதற்கு நிறைய பேர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில்முக்கியமானவர் இயக்குநர் ராம் சார். எனக்கு அவரையும், மாரி செல்வராஜையும் பார்க்கும் போதுபொறாமையாக இருக்கும். இப்படி ஒரு அப்பா - மகனை 
இங்கு யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். காரணம்ராம் சார், மாரி செல்வராஜை கண்டெடுத்து உருவாக்கியது மிகவும் நெகிழ்ச்சியானது. என்னால்முடிந்தவற்றை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு வயது முதலே எனக்குண்டு. அந்தஎண்ணம் தான் இப்போதும் என்னை இயக்குகிறது. சில நேரங்களில் குடும்பம், பொருளாதாரம் குறித்தயோசனை எழுந்தாலும், நம்மைச்சுற்றி இருப்பவர்கள் நமக்கு அளிக்கும் ஆதரவு தான் நம்மை இயங்க வைக்கிறது. நான் போகும் பாதை சரியா என நான் யோசிக்கும் போதெல்லாம்,  என் மனைவி அனிதா 
தான் எனக்கு ஊக்கமளிப்பார். நாம் எங்கிருந்து வந்தோம் என்று நமக்குத் தெரியும். இப்போதிருப்பதுஇல்லாமல் போனாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை. நீ செய்யும் வேலையை நிறுத்தாதே, என தைரியம்கொடுப்பார். அவர் கொடுத்த தைரியம் தான் இந்த பரியேறும் பெருமாள் திரைப்படம். கதிர், ஆனந்தி, யோகிபாபு, லிஜீஸ் என படத்தில்
பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்கள்ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்குமுழு திருப்தியை கொடுத்திருக்கிறது.
யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்லஅவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்துஉரையாடுவதைத் தான் நான் விரும்புகிறேன்அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாக செய்யும்.
அந்தளவிற்கு மாரி செல்வராஜ் சமரசமில்லாத ஒரு சினிமாவை உருவாக்கித் தந்திருக்கிறார்சந்தோஷ்நாரயணன் இசை படத்திற்கு மிக முக்கியமான தூணாக அமைந்திருக்கிறதுமொத்தத்தில் எனக்கு பிடித்தநான் நம்புகிற சினிமாவாக பரியேறும் பெருமாள் வந்திருக்கிறதுஎன்று உணர்ச்சிகரமாக பேசினார்.

இயக்குநர் ராம் பேசுகையில்,
 எனக்கு ஒரு கவிதையில் நான் வாசித்த காட்சி ஞாபகம் வருது. ஒரு தனித்த பனிச்சாலை. ஒரு ஆளற்றசாலையில் நீள அங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது. அந்தக்காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப்போல இருக்கிறது. அந்த நீள அங்கிப்போட்ட மனிதர் தான் பா.இரஞ்சித். அந்த காயப்பட்ட பறவையை காலமெல்லாம் அவர் சுமந்து தான் ஆக வேண்டும். அது அவருக்கு விதிக்கப்பட்ட சாபம்.
மாரிசெல்வராஜ்ஒரு வாழ்வியலை வலியை வாழ்க்கையைப் பதிய வைத்திருக்கிறார்திருநெல்வேலி என்றஊரையும் எனக்கு அறிமுகப் படுத்தியவன் மாரி செல்வராஜ்என் பாட்டன் அப்பன்  வாழ்ந்த அந்ததிருநெல்வேலி மண்ணில் உள்ள வீட்டில் என்னையும் என் மகனையும் அமர வைத்தவன் மாரிசெல்வராஜ்தாமிரபரணி கலவரத்தில் கொல்லாமல் விடப்பட்ட கூழாங்கல் அவன்.
இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரிசெல்வராஜ் என்பதை விடமாரிசெல்வராஜின் இயக்குநர் ராம் என்றுஅடையாளப்படும் நாளை எதிர்பார்க்கிறேன்கதிருக்கு இந்தப் படத்திற்கு பிறகு கமர்ஷியல் ஹீரோவிற்கானஅந்தஸ்து நிச்சயம் கிடைக்கும்பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் அடையாளம்தமிழ் சினிமாவின்அழகியல்கதிரைப்பார்க்கும் போது மௌனராகம் கார்த்திக் போல எனக்குத் தெரிகிறது. இந்தப் பரியேறும்பெருமாள் பணமும் குவிக்கும்மரியாதையையும் பெறும்” என்றார்.
 இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும் போது,
 இந்தப் படத்தை பற்றி பேசுவதிலோ, முக்கியமான விசயங்களைப் பகிர்ந்து கொள்வதிலோ எனக்கு எந்தபயமும் இப்போது இல்லை. காரணம் ராம் சாரும், இரஞ்சித் அண்ணனும் எனக்கு தைரியத்தைதந்திருக்கிறார்கள். முதலில் நான் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த இந்த 12 ஆண்டுகளில் என்வளர்ச்சிக்கு பல வழிகளிலும் துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஜாலியான 
ஒரு படம் செய்யலாம் என்றநோக்கத்தில் எழுத ஆரம்பிக்கப்பட்ட கதைதான் பரியேறும் பெருமாள். ஆனால், போகப் போக அதன்வடிவமே மாறிப்போனது. சட்டக் கல்லூரி படிக்கும் போது நான் சந்தித்த, கடந்து போன பல மனிதர்களும்,சம்பவங்களும் இந்தப் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துப் போயிருக்கிறது. இந்தக் கதையை கேட்டதும்,உடனே ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தவர் இரஞ்சித் அண்ணன். இந்தப் படத்தை நம்மால் மட்டுமேசிறப்பாக எடுத்து முடிக்க முடியும் என அவர் நம்பினார். ஒரு முதல் பட இயக்குநராக எனக்களிக்கப்பட்டமுழுமையான
சுதந்திரம் தான் இந்தப் படத்தை நான் நினைத்த மாதிரி எடுக்க உதவி இருக்கிறது.
முதலில் இந்தப் படத்தின் இசை வேறு மாதிரி இருக்க வேண்டும் என முடிவு செய்தோம்அதற்காகத் தான்சந்தோஷ் சாரிடம் பேசினோம்அது மட்டுமல்லாமல்திருநெல்வேலி மண்ணின் மைந்தர்களையும்கலைஞர்களையும் பயன்படுத்தி இருக்கிறோம்முதலில் 5 பாடல்கள் தான் திட்டமிட்டோம்ஆனால்அவராகவே முன்வந்து இன்னொரு பாடலையும் போட்டுக் கொடுத்தார்.
கேமராமேன் ஸ்ரீதர்எடிட்டர் செல்வா இருவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள்கதிர்கயல் ஆனந்தி இருவரும் அந்த வாழ்க்கையை உள்வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார்கள்இப்படத்தில்யோகி பாபு அண்ணனின் பங்களிப்பு மிகப் பெரியதுஇப்படத்தில் கருப்பி என்கிற நாயின் கதாபாத்திரம்விவாதங்களை உண்டாக்கும்நான் ராம் சாருக்கு
திருப்பிக் கொடுக்க வேண்டும் நினைத்தது இந்தப் படம் தான்இன்று இங்கு என் குடும்பத்தார்கள் யாரும்இல்லைஆனால் மொத்தமாக ராம் சார் இங்கிருக்கிறார்” என்று நெகிழ்வாக பேசினார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது,
இந்த படத்தில் என்னை தாக்கின விஷயம் மட்டும் சொல்கிறேன்பல வருஷங்களில் ஒரு சில இயக்குநர்கள்பெரிய அளவில் வருவார்கள்இதுமாரி செல்வராஜிடம் ஆரம்பத்திலேயே தெரிந்ததுஇந்த படம் எனக்குவாழ்க்கையில் மிகச் சிறந்த திரைப்படம்பொதுவாக ஊர் பக்கம் சென்று படம் எடுப்பதற்கு ஒரு அளவீடுஇருக்கிறதுஅதை எப்படி உடைப்பது பற்றி மாரி செல்வராஜ் என்னிடம் பேசியது எனக்கு பிடித்ததுஉலகசினிமாபொதுமக்கள் பிடித்ததுநமக்கு பிடித்தது என்று மூன்று விதமாக இருந்ததுஅதை அவர் சொன்னவிதம் எனக்கு பிடித்தது.
அவர் வாழ்க்கையில் நடந்ததை சுற்றி படமாக்கி இருக்கிறார்அந்த ஊர் மக்களை அப்படியே உருவாக்கிஇருக்கிறார்எல்லா தரப்பு மக்களுக்கும் இந்த படம் பிடிக்கும்கருப்பி பாடல் வெளிநாட்டில் இருக்கும்நண்பர்கள் பார்த்து என்னை பாராட்டினார்கள்மாரி என்ற இயக்குநர் தமிழ் சினிமாவை எப்படிகொண்டுபோவார் என்று எனக்கு ஒரு கனவு வந்ததுஅதை நீங்கள்
உணர்வீர்கள்பாடல் காட்சிகளை பார்த்து ரஞ்சித் மகிழ்ந்தது எனக்கு உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததுரஞ்சித்போன்ற இயக்குநர்கள் படம் தயாரிக்கும் போது இதுபோன்ற படைப்புகள் கண்டிப்பாக வரும்என்னுடன்வேலை பார்த்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.
பரியேறும் பெருமாள் திரைப்படம் இம்மாதம்(செப்டம்பர்) 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

No comments:

Post a Comment