டி.ராஜேந்தர் - கபிலன்வைரமுத்துவின்
ஏந்திரு அஞ்சலி ஏந்திரு பாடல் முன்னோட்டம்
ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டார்
தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக கவிஞரும் எழுத்தாளருமான கபிலன்வைரமுத்து உருவாக்கியிருக்கும் “ஏந்திரு அஞ்சலி ஏந்திரு” என்ற பாடலின் முன்னோட்டத்தை இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ட்விட்டரில் வெளியிட்டார்.
இந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். இதற்கு பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். “தெருவெல்லாம் சாராயம் திறந்து கிடக்கு - அறிவெல்லாம் துரு பிடிச்சு அழிஞ்சு கிடக்கு” என்று தொடங்கும் இந்தப் பாடல் “குடிச்சு சாவும் கூட்டத்துக்கு கடைகள் எதுக்கு? தண்ணி வண்டி ஓட வைக்க தலைவன் எதுக்கு?” என்று நிகழ்கால சமூகச் சூழலைக் கேள்வி கேட்பதாக அமைந்திருக்கிறது. கடந்தவாரம் இந்தப் பாடலின் தலைப்பை இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார். வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி முழுப் பாடல் வெளியாகிறது.
https://www.youtube.com/watch?v=XujzJkNQkCQ
#TRajhenderr #BeatTheBottle @balubm @lifotainment @kabilanvai @hiphoptamizha
No comments:
Post a Comment