Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Thursday, 5 January 2023

பற்களில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்ப

 பற்களில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'வி லிட்டில்' கிளினிக் காலண்டர் டாக்டர் ஷிஃபா சம்சுதீன்,  அம்ரிதா சமந்த், ஸ்ருதி நகுல், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.


இனிப்புப் பண்டங்களை உண்பதால் பற்சொத்தை ஏற்படுவது என்பது காலம் காலமாக அறியப்பட்ட ஒன்று. ஆனால் பற்களில் துளையிட்டு, நிரப்புதல் உள்ளிட்ட மருத்துவ முறைகளை நாம் பின்பற்றினாலும், பற்கள் தொடர்பான விழிப்புணர்வு பலருக்கும் சொற்ப அளவிலேயே உள்ளது. நாம் பற்களை பாதிக்கும் என எண்ணுகிற துரித   உணவு, இனிப்புப் பண்டங்களைக் கூட ஆரோக்கியமாக மென்று உண்பதன் மூலம் பற்களை பாதுகாக்க முடியும் என்கிறது வி லிட்டில். 
 
 


 
அந்த அடிப்படையில் வி லிட்டிலில் பயிற்சி பெற்று பற்களை சரி செய்துகொண்ட குழந்தைகளை மாடலாக வைத்து  இந்த காலண்டர் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பும் உணவை உண்ணவும் அதே நேரம் பற்களை பாதுகாத்துக்கொள்ளவும் இந்த காலண்டர் மூலம் வி லிட்டில் கிளினிக் உறுதி அளிக்கிறது. 

சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற  இந்த காலண்டர் வெளியீட்டு விழாவில் அம்ரிதா சமந்த், ஸ்ருதி நகுல், விஜயலட்சுமி அகத்தியன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment