Featured post

Indra Movie Review

Indra Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம indra படத்தோட review அ தான் பாக்க போறோம். sabarish nanda தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இ...

Saturday, 14 January 2023

ஆந்திர மாநில சுற்றுலா, கலாசார மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு

 ஆந்திர மாநில சுற்றுலா, கலாசார மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு. திருமதி. ரோஜா செல்வமணி அவர்களை, தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவர் இசையமைப்பாளர் தினா மற்றும் மாநில துணை தலைவர்கள் இயக்குனர் பேரரசு, சுகு பூப்பாண்டியன்



 ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது,  சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு அன்று பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் நடத்தப்படும் விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர். மேலும், ஆந்திர மாநிலத்தில் தமிழை விருப்ப பாடமாக கொண்டு வர கோரிக்கை வைத்தனர்.


@GovindarajPro

No comments:

Post a Comment