Featured post

Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 .

 Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 . திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான திரு  N.L.Sri இயக்கும் இரண்டாவது படம...

Saturday, 14 January 2023

கருமேகங்கள் கலைகின்றன” படப்பிடிப்பு நிறைவடைந்தது

 "கருமேகங்கள் கலைகின்றன”

படப்பிடிப்பு நிறைவடைந்தது


திரைப்படங்களுக்காக அமைக்கப்படும் அரங்கில் நான் படப்பிடிப்பு நடத்த விரும்புவதில்லை. காட்சிகள் இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு படமாக்குகிறேன். மக்களுக்கிடையே எனது பாத்திரங்களை உலவ விடுவதற்காக ஒவ்வொரு காட்சியையும் படமாக்கி முடிப்பதற்குள் படாதபாடு பட வேண்டி இருக்கிறது.




மக்களிடத்தில் பேருபெற்ற பாரதிராஜா, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோரைக்கொண்டு நேற்றோடு 'கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. மனதுக்கு நிறைவான படைப்பை உருவாக்கத்தான் இத்தகைய போராட்டம் என எண்ணுகையில் சோர்வும் அயர்ச்சியும் மறைகின்றன. 


இனி வரும் நாட்கள் படைப்பை செறிவூட்டி உயிருள்ள படைப்பாக மாற்றுவதற்கான நாட்கள். இவ்வாண்டு இறுதிக்குள் என் இயக்கத்தில் மூன்று படைப்புகள் வெளிவரும் என நம்புகிறேன்! இத்தைப்பொங்கல் அனைவருக்கும் வளம் பொங்கும் வாழ்வை வாரி வழங்கட்டும் என எங்களின் நிறுவனம் மற்றும் குழு சார்பாக வாழ்த்துகிறேன்!


- தங்கர் பச்சான்

No comments:

Post a Comment