Featured post

Hombale Films and Prabhas all set to join forces for three mega films, set to

 *Hombale Films and Prabhas all set to join forces for three mega films, set to redefine entertainment on the big screens!*   In an unpreced...

Tuesday 14 February 2023

அருவா சண்ட பட நாயகனின் அடுத்த படம் 5 மொழிகளில் தயாராகிறது

 *அருவா சண்ட பட நாயகனின் அடுத்த படம் 5 மொழிகளில் தயாராகிறது*


சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வெற்றி படம்  *அருவா சண்ட* இப்படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான *திரு V ராஜா* தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் பட தலைப்பை இன்று படக்குழுவினர் வெளியேற்றுள்ளனர். தமிழில் *நானும் ஹீரோ தான்* எனும் படத் தலைப்பை *திரு விஜய் சேதுபதி* அவர்களும் தெலுங்கு பதிப்பை *திரு கலைப்புலி எஸ் தாணு* அவர்களும் கன்னட மதிப்பை *திரு முரளி ராம நாராயணன்* அவர்களும் மலையாள பதிப்பை *திரு கதிரேசன்* அவர்களும் இந்தி பதிப்பை *திரு டி ராஜேந்தர்* அவர்களும் இன்று வெளியிட்டுள்ளனர்.. 











தமிழ் திரையுலகத்தில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் இப்பட தலைப்பு பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த பட தலைப்பு மற்றும் வெளியீடு பற்றி படத்தில் தயாரிப்பாளரும் இயக்குனர் மற்றும் நாயகனுமான *திரு V ராஜா* கூறியிருப்பதாவது..


மக்களுக்கு நல்ல கருத்து சொல்ல வேண்டும் என நான் எடுத்த படம் தான் *அருவா சண்ட* படம் எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பு பெற்றது ஆனால் மக்கள் எனக்கு நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள் எனவே அதை கருத்தில் கொண்டு எனது அடுத்த படத்தை ஐந்து மொழிகளில் தயாரித்து கதாநாயகனாக நடிக்க திட்டமிட்டுள்ளேன் அதன் பட தலைப்பை தான் இன்று வெளியிட்டுள்ளோம்.


படத்தின் தலைப்பு *நானும் ஹீரோ தான்* உண்மைதான் நான் ஹீரோவாக தொடர்ந்து நடிக்கலாமா அல்லது படத் தயாரிப்போடு முடித்துக் கொள்ளலாமா என்பதை இந்த ஒரு படம் தீர்மானித்து விடும். உலக சினிமா வரலாற்றில் இது போன்ற ஒரு திரைக்கதையை எவரும் கண்டிருக்க முடியாது என நான் கூறவும் முடியாது காரணம்  பொதுவாக சினிமாவில் வெற்றி பெற்ற படங்களை பார்த்தல் ஒரு படத்தின் கதை இரண்டு மூன்று படங்களின் கதைகளை காப்பி அடித்து எடுத்திருப்பார்கள் அவை பெரிய வெற்றியும் அடைந்துள்ளது அதை கருத்தில் கொண்டு நான் இந்த படத்திற்கான கதையை ஒரு பத்து படங்களில் இருந்தாவது காப்பியடித்து வைத்திருக்கிறேன் எனவே இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்.


விரைவில் படப்பிடிப்பை துவங்க இருக்கும் இதில் அதிகமாக புதுமுகங்களை கொண்டு வர வேலைகள் நடந்து வருகிறது அதன் ஒரு பகுதியாக முகேஷ் குமார் ஜெய் ரத்திக்கா ரத்தன் மற்றும் சிந்து கிராபிக்ஸ் திரு பவன் குமார் ஆகியோர் தற்போது தேர்வாகி உள்ளனர். படப்பிடிப்புக்கான பணிகளில் படக்குழுவினர்.

No comments:

Post a Comment