Featured post

Meiyazhagan has no action-packed sequences,

 *“Meiyazhagan has no action-packed sequences, but is an out-and-out commercial film” - Actor Karthi* *“Director Prem is never smug-bitten b...

Sunday 19 February 2023

மயில்சாமி இறுதியாக feb 16 அன்றுவரை நடித்த விளம்பரம்

 *மயில்சாமி இறுதியாக feb 16 அன்றுவரை நடித்த விளம்பரம் குறும்பட இயக்குநர் ராகுலின்  அஞ்சலி*


மயில்சாமி  எங்களோடு இரண்டு நாட்களுக்கு முன்பாக அன்பாக பேசி பழகியவர் இன்று இல்லை என்பது எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. விளம்பரம் குறும்பட இயக்குனர் ராகுல் வருத்தம்...


பிப்ரவரி 13 முதல் 16 வரை ஃபிலிம் சிட்டி நடைபெற்ற

விளம்பரம் என்ற குறும்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அவருடன் இணைந்து  ரேகா நாயர், சுகைல், இப்ராஹிம்,ராம் மற்றும் பல நடித்தனர்.


அப்போது  மயில்சாமி அவர்கள் பொதுவாக நான் குறும்படங்களில் நடிப்பதில்லை ஆனால் இயக்குனர் ராகுல் என்னை அணுகிய முறை என்னை மிகவும் கவர்ந்தது அதேபோல் இப்படம் ஒரு சிறந்த சமூக விழிப்புணர்வு படம் என்பதாலும் நடிக்கிறேன் என்றார்.






இப்படியாக எங்களோடு எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் நான் புதுமுக இயக்குனர் என்றாலும் எனக்கு அனைத்து விதத்தில் ஒத்துழைப்பு தந்தவர் இன்று இல்லை என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்றார் இயக்குனர் ராகுல்..


மேலும்  இந்த குறும்பட கதையை முழு நீளப்படமாக உருவாக்கப்பட திட்டமிட்டு இருந்தோம் அதிலும் அவர் நடித்துக் கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.


அவரின் ஆன்மா எங்களை வாழ்த்தட்டும் அவரின் ஆன்மா  ஓய்வு பெறட்டும் என்றார்..

இந்த குறும்படத்திற்கு ஒளிப்பதிவு அசோகர்.

No comments:

Post a Comment