மலைப்பிரதேசங்களில் நடக்கும் ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் " மூர்க்கன்
K. N. பைஜூ இயக்கி நாயகனாக நடிக்கும் " மூர்க்கன் "
நவகிரக சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு " மூர்க்கன் " என்று வித்தியாசமாக டைட்டில் வைத்துள்ளனர்.
இந்த படத்தில் K.N. பைஜூ எழுதி, இயக்கி நாயகனாக நடிக்கிறார்.
மேலும் ரியாஸ்கான், சம்பத்ராம், கன்னட நடிகர் டென்னீஸ் கிருஷ்ணா, மலையாள நடிகர் ஜெயன் சேர்தலா, நாராயணன் குட்டி, விஜயராஜ், கோபிநாத், MJ. ஜேக்கப் மாம்பறா, கேசவ தேவ், அபாபில் ரவி ஆகியோறும் நடிக்கிறார்கள்.
மற்றும் வில்லன் காதபாத்திரத்தில் மூன்று சைனீஸ் நடிகர்கள் நடிக்கின்றார்கள். கதாநாயகியாக நடிக்க ஹிந்தியில் பிரபல நாயகியிடம் பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது.
ஒழிப்பதிவு - ராஜாராவ், கலை இயக்குனர் பி சுப்புரமணியம், மேக்கப் K R கதிர்வேல், ஆடை சுகேஷ் தானுர்,
எடிட்டிங் - K N B,
பாடல்கள் - சிநேகன், தயாரிப்பு நிர்வகம் ஜேக்கப் மாம்பறா,
தயாரிப்பு மேற்பார்வை - R. நாகராஜ்,
மக்கள் தொடர்பு - மணவை புவன்
தயாரிப்பு - நவகிரக சினி ஆர்ட்ஸ்.
படம் பற்றி இயக்கி, நாயகனாக நடிக்கும் K.N. பைஜூ கூறியதாவது....
இந்த படம் ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் கதை.
மலை பிரதேசத்தில் மர்மக் கொலைகள் நடக்கும் இடத்திற்கு நான்கு நண்பர்கள் வந்து மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் மர்மமான முறையில் சில ஆபத்தான பிரச்சனையில் சிக்கி திரும்பி போக முடியாமல் தவிக்கிறார்கள்.
இந்த மர்ம கொலைகளை செய்வது யார்? எதற்காக செய்கிறார்கள்? இறுதியில் நண்பர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பது தான் படத்தின் திரைக்கதை.
கர்நாடக மற்றும் தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி வருகிறோம்.
படப்பிடிப்பு குற்றாலாம் மற்றும் பெங்கலூர் ஆகிய இடங்களில் விருவிருப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார் இயக்குனர் K.N. பைஜூ.
No comments:
Post a Comment