Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Monday, 13 February 2023

தூரிகையின் தீண்டல் மியூசிக் வீடியோ வெளியீட்டு விழா

 தூரிகையின் தீண்டல் மியூசிக் வீடியோ வெளியீட்டு விழா 


Kanmani Productions சார்பில், மாலா கோபால் தயாரிப்பில், இயக்குநர் கிருஷ்ணன் மாரியப்பன் இயக்கத்தில், கவிஞர் விவேக் வரிகளில், CD அன்புமணி இசையமைப்பில் உருவாகியுள்ள காதல் ஆல்பம் பாடல்  "தூரிகையின் தீண்டல்". திருக்குறளை மையப்படுத்தி ஆண் பெண் உறவை அழகாகச் சொல்லும் இப்பாடலில் ஆதி கோபால், நமீதா கிருஷ்ணமூர்த்தி அற்புதமாக நடித்துள்ளார்கள். இப்பாடலில் நடித்ததோடு ஆதி இப்பாடலை சொந்தக்குரலில் பாடியுள்ளார்.

 





இப்பாடலின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்


இந்நிகழ்வினில் 


தயாரிப்பாளர் மாலா கோபால் கூறியதாவது...,


"பாடலாசிரியர் விவேக் இந்தப் பாடலை எழுத ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியமும், மகிழ்ச்சியையும் அளித்தது.  இசையமைப்பாளர் அன்புமணியின், பங்களிப்பு அளப்பரியது.  இயக்குநர் கிருஷ்ணன் மாரியப்பன் இந்த குழுவை ஒருங்கிணைத்து, அவருடைய கருவை  மிகச்சரியான படைப்பாக உருவாக்கி இருக்கிறார். இணை தயாரிப்பாளர் பிரியா, எனது இடத்திலிருந்து இந்த பாடலை சிறப்பாக உருவாக்கினார். இந்த பாடலை கேட்டு உங்களுடைய ஆதரவைத் தாருங்கள் நன்றி." 


ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன் பேசியதாவது..


எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கு நன்றி. ஒட்டுமொத்த குழுவும் மிகச்சிறப்பான ஒரு பாடலை கொடுத்து இருக்கிறோம்.  ஆதி மற்றும் நமிதா உடைய நடிப்பு அற்புதமாக இருக்கிறது. பாடலை பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


இசையமைப்பாளர்  CD அன்புமணி பேசியதாவது...

 

இந்த வாய்ப்பை எனக்களித்த இயக்குனருக்கு நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்தார். நான் அதை நிறைவேற்றி இருக்கிறேன் என்று  நினைக்கிறேன். அனைவரும் இணைந்து ஒரு சிறப்பான பாடலை உருவாக்கி இருக்கிறோம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் நன்றி.


நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது..,


இயக்குநருக்கு ஒரு தீர்க்கமான பார்வை இருந்தது. தனக்கு என்ன வேண்டும் என்ற தெளிவு அவரிடம் இருந்தது. இந்த குழுவுடன் இணைந்து  பயணித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.  தயாரிப்பாளர் கொடுத்த ஆதரவு தான் இந்த பாடல் சிறப்பாக வரக் காரணம். இந்தப்பாடலை மிகச்சிறப்பாக உருவாக்கியுள்ளோம் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.


நடிகர் ஆதி கோபால் பேசியதாவது...


சிறுவயதிலிருந்தே இசை மேல் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால் அது என்னை இங்குக் கூட்டி வரும் என்று நினைக்கவில்லை. இந்த அற்புதமான குழுவுடன் பயணித்ததே மகிழ்ச்சி. இந்த பாடலுக்கு உயிர் கொடுத்த இசையமைப்பாளருக்கு நன்றி.  குழுவாக இணைந்து இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம். கேட்டுவிட்டு கூறுங்கள். நன்றி.


இயக்குநர் கிருஷ்ணன் மாரியப்பன் பேசியதாவது..,


"தயாரிப்பாளர் மாலா கோபால், தமிழ் மீதும் திருக்குறள் மீதும் மிகுந்த ஆர்வம் உடையவர். அந்த குறளால் இணைவோம் என்ற ஒரு நிகழ்வு தான் இங்கு எங்களை கொண்டு வந்தது என்றால் மிகையாகாது. ஒளிப்பதிவாளரின் பங்கு தான் இந்த பாடலை மிக சிறப்பானதாக ஆக்கியது. ஆதி மற்றும் நமீதா உடைய நடிப்பு, இந்த பாடலை மேலும் சிறப்பாக மாற்றி இருக்கிறது.   இப்பாடலை உருவாக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி."


A R ரிஹானா பேசியதாவது..,


"இந்தப் பாடலை பார்க்கும் போது ஒரு உணர்வுப்பூர்வமான பாடலாகத் தெரிந்தது. ஆதி மற்றும் நமீதா உடைய நடிப்பு வசீகரிக்கும் படி அமைந்து இருக்கிறது. இசையமைப்பாளர் அன்புமணி உடைய இசை நம்மை ஈர்க்கிறது. கண்டிப்பாக இந்த பாடல் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். 


நடிகர் ஸ்ரீகாந்த் பேசியதாவது..,


"பாடகாரகாவும், நடிகராகவும் சிறப்பான ஒரு பாடலை கொடுத்து இருக்கிறார் ஆதி. நமீதா உடைய நடிப்பு இந்த பாடலை மேம்படுத்தி இருக்கிறது. படத்தை விடப் பாடல் தான் நம்மைத் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும், அந்த வகையில் இந்த பாடல் அவ்வளவு ஆழமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இருக்கிறது. இந்த கூட்டணியே சிறப்பாக இருக்கிறது. ஒரு இயக்குநராகக் கிருஷ்ணன் இந்த  ஒட்டுமொத்த குழுவிடம் இருந்து சிறப்பாக பணியை வாங்கி இருக்கிறார். இந்த பாடல் அனைவரது பங்களிப்பில் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். 


இயக்குநர் ரத்ன குமார் பேசியதாவது..,


 என்னுடைய உதவி இயக்குநர் கிருஷ்ணனுக்கு இனிமேல் இந்த பாடல் அடையாளமாக இருக்கும். தொலைதூர உறவை மையமாக வைத்து ஒரு பாடல் எனும் போது, அந்த கருவே எனக்குப் பிடித்து இருந்தது.  இது பேசப்படவேண்டிய கருத்து,  இந்த பாடல் இதில் பணியாற்றிய பலருக்கும் ஒரு ஆரம்பமாக இருக்கும். ஆதி, நமீதா இருவரின் கெமிஸ்ட்ரி ரசிக்கும் படி இருந்தது. பாடல் சிறப்பாக வந்துள்ளது அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்


SP முத்துராமன் பேசியதாவது..,


"இந்த பாடலை கேட்கும் போது, ரசிக்கும் படி இருக்கிறது. ஆதியின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.  பன்முக திறமை கொண்ட எஸ் பி பி மாதிரி அவர் வர வேண்டும். நமீதாவின் நடிப்பு அபாரம், அவருக்கு இன்னும்  பல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநருக்கு எனது வாழ்த்துகள். இதில் பணியாற்றியுள்ள அனைவரும் திரைப்படத்தில் பணியாற்ற எனது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment