Featured post

Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released

 *'Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released* *Vijay Sethupathi Shines as 'Bold Kannan' in the Up...

Wednesday, 22 February 2023

வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை & சேவா

 *வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை & சேவா பாரதி இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ வசதி இல்லாத, மிகவும் பின்தங்கிய கிராமப்புற, ஏழை எளிய மக்களுக்காக இன்று "நடமாடும் மருத்துவ முகாம் ஊர்தி" சேவையை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.*





முன்னதாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் தலைமை வகித்தார், தென் பாரத ஆர்.எஸ்.எஸ் மக்கள் தொடர்பு அமைப்பாளர் திரு பிரகாஷ் அவர்கள் சிறப்புரையாற்றினார், கனரா வங்கி இயக்குனர் திருமதி நளினி பத்மநாபன், சேவா பாரதி மாநில தலைவர் திரு ரபு மனோகர் உள்ளிட்டோர் வரவேற்புரையாற்றினர்.


மேலும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment