அகன்ற வாய் சிரிப்புடனும், ஸ்படிகமான மனதுடனும்,
யாருக்கும் தீங்கு நினையாத எல்லோருக்கும் உழைத்தவராய், நண்பராய், தோழனாய், நெஞ்சில் பட்டதை நேர்படப் பேசுபவராய், பறந்தும் திரிந்தும் வந்த எங்கள் அன்பு மயில்சாமி அவர்கள் நம்மை விட்டு பிரிந்ததை எண்ணி தமிழ் திரையுலகம் விக்கித்து நிற்கின்றது.
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரில் ஒருவரான, மயில் சாமி அவர்கள் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் ஆவார். இவர் தமிழில் 100கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருடைய இழப்பு தமிழ் திரையுலகில் ஒரு மாபெரும் இழப்பு.
அவருடைய மறைவு திரைப்படத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் திரைப்பட உலகினருக்கும், ரசிகர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
தலைவர்,
M.நாசர்,
தலைவர்,
தென்னிந்திய நடிகர் சங்கம்.
No comments:
Post a Comment