Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Saturday, 18 February 2023

அடுத்த வீட்டு இளைஞன் போன்று அறிமுகமாகி அடுத்த லெவல்





அடுத்த வீட்டு இளைஞன் போன்று அறிமுகமாகி அடுத்த லெவல் வளர்ச்சியைத் தொட்டு தெலுங்கு திரையுலகை தெறிக்க விடும் கிரண் அப்பாவரம்*


புதுயுகக் கதைகள் மூலம் இளைஞர்களை ஈர்க்கும் இளம் மற்றும் நம்பிக்கைக்குரிய நடிகரான கிரண் அப்பாவரம் சுவாரசியமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த வரிசையில், தெலுங்கு திரையுலகில் பெரிதும் மதிக்கப்படும் ஜிஏ2 பிக்சர்ஸ் பேனரில் கிரண் அப்பாவரம் நடித்துள்ள விறுவிறுப்பான குடும்பப் படமான 'வினரோ பாக்யமு விஷ்ணு கதா' (விஷ்ணுவின் கதையை கேட்டால் புண்ணியம்) தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இப்படம் வெளியாகி உள்ளது. 


பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் பணிபுரிய வேண்டும் என்பது வளர்ந்து வரும் நடிகர்களின் கனவாகும். ஏனெனில், அவ்வாறு செய்வது அவர்களின் சந்தை மதிப்பை உயர்த்தவும், முன்னணிக்கு அவர்களை அழைத்துச் செல்லவும் உதவும். மிகவும் குறுகிய காலத்திலேயே பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிரண் அப்பாவரமுக்கு கிடைத்துள்ளது.  


'ராஜா வாரு ராணி காரு', 'எஸ்.ஆர். கல்யாண மண்டபம்', 'செபாஸ்டியன்', 'சம்மதமே' போன்ற படங்களில் ராயலசீமா வட்டார வழக்கில் வசன உச்சரிப்பு, நல்ல தோற்றம் மற்றும் சுறுசுறுப்பான நடிப்பால் அறியப்பட்ட இந்த இளம் நட்சத்திரத்தின் புகழ் அவரது முதல் படத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, முன்னணி நிறுவனங்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முறையை 'மீட்டர்' மற்றும் 'ரூல்ஸ் ரஞ்சன்' ஆகிய திரைப்படங்களில் கிரண் நடித்து வருகிறார். இவைத் தவிர இதரப் படங்களும் பட்டியலில் உள்ளன. 


மேலும், அவரது அசாத்தியமான நடிப்புத் திறமைக்காக தெலுங்கு திரையுலக முன்னணியார் பலர் அவரை ஆதரிக்கிறார்கள். அவரது தோற்றமும், நடிப்புத் திறமையும் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை நாளுக்கு நாள் ஈர்த்து வருகின்றன. மேற்கண்ட காரணங்களுக்காக, எளிய முறையில் தனது பயணத்தை தொடங்கிய கிரண் அப்பாவரம் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருகிறார். இவரது படங்களுக்கு அதிக அளவில் செலவு செய்ய முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது தயாராக உள்ளன. 


அவரது முந்தைய படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும், இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை கிரண் தக்க வைத்துக் கொண்டுள்ளார். எளிமையான குணம், திறமையான நடிப்பு மற்றும் உண்மையான முயற்சிகளின் காரணமாக வலுவான ஒரு இடத்தை அவர் பெற்றுள்ளார். கிரணின் புதிய படமான 'வினரோ பாக்யமு விஷ்ணு கதா' அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் மற்ற பிப்ரவரி வெளியீடுகளை விட அதிக எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தி இருந்ததும், படக்குழுவினர் வெளியிட்ட பரபரப்பான டிரைலர் பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 


முன் வரிசையில் இடம் பிடிப்பதற்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி மட்டுமே தேவை எனும் நிலையில் இருந்த கிரண் அப்பாவரமுக்கு, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக 'வினரோ பாக்யமு விஷ்ணு கதா' அமைந்துள்ளது. இப்படத்தின் புதுமையான கதையம்சம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. 


***


*

No comments:

Post a Comment