Featured post

7 Wonder Star Women South India 2023

 *7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation* Click he...

Monday 20 February 2023

நாய்கள் வேட்டையாடும் வித்தியாசமான சர்வைவல் திரில்லர் “நோ எண்ட்ரி

 *நாய்கள் வேட்டையாடும் வித்தியாசமான சர்வைவல் திரில்லர் “நோ எண்ட்ரி” !!* 


*ஆண்ட்ரியா நடிப்பில் காட்டுக்குள் நடக்கும் சர்வைவல் திரில்லர் “நோ எண்ட்ரி” !!*

ஜம்போ சினிமாஸ்  நிறுவனம் சார்பில்,  தயாரிப்பாளர் A. ஸ்ரீதர் தயாரிக்க, R.அழகு கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில்,  வித்தியாசமான சயின்பிக்சன் சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “நோ எண்ட்ரி”.  விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 





ஒரு காட்டுக்குள் ராணுவத்திற்காக ஆராய்ச்சி செய்யப்போன தன் தந்தையை தேடிபோகிறார் , அதே போல் வேறு வேறு காரணங்களுக்காக டூரிஸ்டாகவும் சிலர் அந்தக் காட்டுக்குள் வருகின்றனர். அங்கே மரபணு மாற்றப்பட்ட அதிசக்தி வாய்ந்த அழிக்க முடியாத நாய்களிடம் அவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த நாய்களின் வேட்டையில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா ? அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறியதா என்பதே  “நோ எண்ட்ரி”  படத்தின் கதை. 


தமிழில் அரிதாக நிகழும் சயின்ஸ்பிக்சன் வகையில் புதுமையான திரைக்கதையில் அனைவரையும் ஈர்க்கும் கமர்ஷியல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. படக்குழுவினர் இதுவரை எந்த தமிழ்ப்படமும் படமாக்கப்படாத மேகாலயாவின் சிரபுஞ்சி காடுகளில் இப்படத்தினை படமாக்கியுள்ளனர். அதிக மழைப்பொழிவும் இருட்டும் சூழ்ந்த காடுகளில் கடும் உழைப்பை கொட்டி படத்தை உருவாக்கியுள்ளனர். பயிற்சி அளிக்கப்பட்ட உயர்வகை நாய்கள் இப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வழங்கியுள்ளன. 


ரசிகர்கள் நகராமல் இருக்கை நுனியில் இருந்து ரசிக்கும் மாறுபட்ட திரை அனுபவமாக இப்படம் இருக்கும். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


நடிகர்கள் : ஆண்ட்ரியா, பிரதாப் போத்தன், ரன்யா ராவ் ஆதவ். 


தொழில்நுட்ப வல்லுநர்கள்


தயாரிப்பு நிறுவனம் : ஜம்போ சினிமாஸ் 

தயாரிப்பாளர்: A. ஸ்ரீதர் 

இயக்குநர்: R.அழகு கார்த்திக் 

ஒளிப்பதிவு : ரமேஷ் சக்கரவர்த்தி 

கலை இயக்குனர்: உமா சங்கர், ஜெய்காந்த் இசையமைப்பாளர்: அஜேஷ் அசோக் 

எடிட்டர்: பிரதீப் E ராகவ் 

சண்டைக்காட்சி அமைப்பு : G.N.முருகன் 

மக்கள் தொடர்பு : ஜான்சன்

No comments:

Post a Comment