Featured post

7 Wonder Star Women South India 2023

 *7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation* Click he...

Thursday 23 February 2023

தனது படத்தின் போஸ்டரை தானே களத்தில் இறங்கி ஒட்டிய இயக்குனர்

 தனது படத்தின் போஸ்டரை தானே களத்தில் இறங்கி ஒட்டிய இயக்குனர் மோகன்.G


பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம்  படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  தற்போது தயாரித்து இயக்கிய " பகாசூரன் " படம் கடந்த வெள்ளியன்று ( பிப்ரவரி 17) திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.







இந்த படத்தில் 

 இயக்குனர் செல்வராகவன்,நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாராக்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சாம். CS இசையமைத்திருந்தார்.


ஒரு திரைப்படத்திற்கு  எத்தனையோ விளம்பரம் செய்தாலும் ஊர் முழுக்க கலர் போஸ்டர் ஒட்டுவது தான் நிறைவான விளம்பரமாக இன்றுவரை பார்க்கப் படுகிறது.


இந்த நிலையில் நேற்று இரவு பகாசூரன் படத்தின் போஸ்டரை  களத்தில் இறங்கி இயக்குனர் மோகன்.G ஒட்டினார்.

இப்படி செய்தது தனக்கு மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment