*500 ஏழைக் குழந்தைகளுக்கு இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நேரில் காணும் கனவை நனவாக்கி இருக்கிறது ராஜஸ்தான் காஸ்மோ கிளப் மேக்னம்.*
சென்னை செப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் மொத்தமும் விற்று தீர்ந்துவிட்ட நிலையில் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் ஏராளமானோர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஏழைக்குழந்தைகள் 500 பேரை மைதானத்திற்கு அழைத்து சென்று போட்டியை காணவைக்க திட்டமிட்ட ஆர்.சி.சி. மேக்னம், அதற்கான ஏற்பாடுகளை செய்து அந்த குழந்தைகளின் கனவை நனவாக்கி உள்ளது.
இந்த குழந்தைகள் அனைவரும் ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டு காவலர் நலன் டி.ஜி.பி கருணாசாகர் முன்னிலையில் கொடியசைத்து சேப்பாக்கம் மைதானம் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு இணை ஆணையர் திஷா மிட்டல், ராஜஸ்தான் ரத்னா விருதுபெற்ற சமூக செயற்பாட்டாளர் லலிதா ஜாங்ரா, மங்கள்சந்த்ஜி டாடெர், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் கௌரவ பொருளாளர் ஸ்ரீனிவசராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment