Featured post

Vaa Vaathiyar Movie Review

Vaa Vaathiyaar Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vaa vaathiyar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Nalan Kumar...

Friday, 24 March 2023

ஏப்ரல் மாதம் வெளியாகும் " ரஜினி " படம்

 ஏப்ரல் மாதம் வெளியாகும்  " ரஜினி " படம்


வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம்  " ரஜினி " 










சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப்  படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.


விஜய் சத்யா  கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துதுள்ளார். பாடல்களை  நெல்லை ஜெயந்தன், லாவர்தன் இருவரும் எழுதியுள்ளனர்.


ஒளிப்பதி - மனோ V.நாராயணா


கலை - ஆண்டனி பீட்டர்


நடனம் - செந்தாமரை


எடிட்டிங் - சுரேஷ் அர்ஷ்


ஸ்டண்ட் - சூப்பர் சுப்பராயன்


தயாரிப்பு மேற்பார்வை - நிர்மல்


புரொடக்ஷன் கண்ட்ரோளர் - பூமதி - அருண்


மக்கள் தொடர்பு - மணவை புவன்


தயாரிப்பு  - V.பழனிவேல், கோவை பாலசுப்ரமணியம்.


திரைக்கதை எழுதி இயக்குகிறார் A.வெங்கடேஷ்


படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது...


படத்தின் இறுதிக்கட்ட பணிகள்  நடைபெற்று வருகிறது. 


திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான  படமாக இதை உருவாக்கி  உள்ளேன்.


ரஜினி என்று பெயர் வைத்தவுடன் நிறைய பேர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையா என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இது அவருடைய கதை இல்லை நாயாகன் தீவிர ரஜினி ரசிகராக வருகிறார் அதனால் தான் படத்திற்கு ரஜினி என்று தலைப்பை வைத்துள்ளோம்.


அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான செண்டிமென்ட் கலந்து ஜனரஞ்ஜகமாக உருவாக்கியுள்ளோம்.


படம்  வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment