ஜியோசினிமாவின் பிராண்டு தூதராக (Brand Ambassador) இணையும் பிரபல கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ்
~ T20 போட்டியில் உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சூர்யகுமார், புதிய ‘360 -டிகிரி’ ஷோகேஸ் – க்காக களமிறங்குகிறார் ~
மும்பை: 14 மார்ச் 2023: T20 போட்டி போட்டியில் உலகில் நம்பர் 1 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ், ஜியோசினிமாவின் பிராண்டு தூதராக (Brand Ambassador) அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்திய அணியின் பேட்டிங் திறனுக்கு வலுசேர்க்கும் நட்சத்திர வீரராகத் திகழும் சூர்யகுமார் யாதவ் – ன் இப்புதிய பொறுப்பு, கிரிக்கெட் போட்டிகளை டிஜிட்டல் முறையில் பார்த்து மகிழ ஏதுவாக்க வேண்டுமென்ற டாடா ஐபிஎல் போட்டியின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் பார்ட்னரான ஜியோசினிமாவின் குறிக்கோளை சாத்தியமாக்கும். கிரிக்கெட் நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ், இதற்கான பல தொடர்ச்சியான முன்னெடுப்புகளிலும், சமூக ஊடக விளம்பர செயல்பாடுகளிலும் இடம்பெறுவார்.
கடந்த 18 மாதங்கள் காலஅளவில் ஒயிட்பால் கிரிக்கெட் போட்டியில் மிக அதிகமாக ரன்களை குவித்திருக்கும் சாதனைக்கு சொந்தக்காரராக சூர்யா திகழ்கிறார். விரைவில் தொடங்கவிருக்கும் டாடா ஐபிஎல் போட்டித்தொடரின்போது ஜியோசினிமாவின் டிஜிட்டல் ஒளிபரப்பு வழியாக கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் ஈடுபாட்டை இன்னும் விரிவாக்கவும், ஆழமாக்கவும் ஜியோசினிமாவின் பிராண்டு தூதராக சூரியகுமாரின் பங்களிப்பு உதவும்.
“இந்திய ப்ரீமியர் லிக் – ன் வரவிருக்கும் சீசனுக்கு ஜியோசினிமாவின் ஒத்துழைப்போடு செயல்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகத் தரத்திலான ஒளிபரப்பின் வழியாக, உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களுக்கு டிஜிட்டல் பார்வை அனுபவத்தை புரட்சிகரமானதாக ஜியோசினிமா மாற்றி வருகிறது. அத்துடன், எளிதில் கிடைக்கப்பெறுவதாகவும் மற்றும் பலரும் பயன்படுத்தும் வகையில் எளிய கட்டணம் கொண்டதாகவும் இது இருப்பது இதன் தனிச்சிறப்பாகும். டிஜிட்டல் செயல்தளங்களில் தொடர்ந்து நிகழும் புதுமையான செயல்பாடுகள் ரசிகர்கள் விரும்பி பயன்படுத்தும் விருப்பத்தேர்வாக இதனை ஆக்கியிருப்பதால் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் நேர்த்தியாக வழங்கும் இந்த கூட்டுவகிப்பை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்,” என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.
“உலகத் தரத்தில் புத்தாக்கம், நிகரற்ற த்ரில் மற்றும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, அவர்களது ஆர்வத்தை தக்க வைப்பதற்கான அவசியம் போன்ற தரஅம்சங்கள் எங்களது செயல்பாடுகளாக இருந்து வருகின்றன. இதே பண்புகளை நேர்த்தியாகப் பிரதிபலிப்பவராக சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். டாடா ஐபிஎல்(IPL) போட்டித்தொடரின் எமது டிஜிட்டல் ஒளிபரப்பு மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை அடித்து விரட்டும் சூர்யகுமாரின் அற்புதமான பேட்டிங் திறனை அழகாக வெளிப்படுத்தும். அணுகிப்பெறும் வசதி, கட்டுபடியாகக்கூடிய தன்மை மற்றும் மொழி போன்ற எந்த வரம்பெல்லைகளும் இல்லாமல், டிஜிட்டலில் நுகர்வோர்களுக்கு அவர்களது மனம் கவர்ந்த விளையாட்டை நாங்கள் வழங்கவிருக்கிறோம்.” என்று வயாகாம்18 ஸ்போர்ட்ஸ் தலைமை செயல் அலுவலர் திரு. அனில் ஜெயராஜ் கூறினார்.
டாடா இந்தியன் ப்ரீமியர் லீக் – ன் 2023 சீசன் மார்ச் 31-ம் தேதி தொடங்குகிறது. அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கும் தொடக்க நிகழ்வில் தற்போது சேம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, எம்எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த சீசனுக்கு டாடா ஐபிஎல் – ன் அனைத்து போட்டிகளும் ஜியோசினிமாவில் கட்டணமின்றி நேரலையாக வழங்கப்படுகின்றன. இதற்கும் கூடுதலாக, 2023 டாடா ஐபிஎல் பதிப்பின் வழியாக 200 மில்லியனுக்கும் அதிகமான இன்டர்நெட் பயனாளிகளுக்காக 4K ஃபீடு, பல்வேறு – மொழிகளில் மற்றும் மல்ட்டி-கேம் பிரசண்டேஷன், புள்ளி விவர தொகுப்பு மற்றும் பிளே அலாங் அம்சத்தின் வழியாக இன்டராக்டிவிட்டி ஆகிய சிறப்பு அம்சங்களையும் ஜியோசினிமா வழங்குகிறது.
ஜியோ, ஏர்டெல், Vi மற்றும் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு தற்போது கிடைக்கப்பெறும் ஜியோ சினிமா, ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உட்பட, ஐந்து மொழிகளில் விமன்ஸ் ப்ரீமியர் லீக் போட்டிகள் அனைத்தையும் நேரலையாக ஸ்ட்ரிமிங் செய்கிறது.
ஜியோசினிமாவை (iOS & ஆண்ட்ராய்டு) பதிவிறக்கம் செய்வதன் மூலம் தாங்கள் விரும்பும் விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் தொடர்ந்து பார்த்து ரசிக்கலாம். சமீபத்திய நிகழ்நிலைத் தகவல்கள், செய்திகள், ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம், டிவிட்டர் மற்றும் யூடியூப் மீது ஸ்போர்ட்ஸ்18 – ஐ ரசிகர்கள் பின்தொடரலாம் மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம், டிவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவற்றின் மீது ஜியோசினிமாவை பின்த
No comments:
Post a Comment