Featured post

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், இயக்குநர் ஹாருன்

 சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், இயக்குநர் ஹாருன் இயக்கத்தில், 7G திரைப்படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !!  மிரட்டலான ஹாரர் தி...

Tuesday 14 March 2023

ஜெஸ் ஜோனாசென் அணியில் இருந்தால், எதைப் பற்றியும் கவலைப்பட

 ஜெஸ் ஜோனாசென் அணியில் இருந்தால், எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார் ரீமா மல்ஹோத்ரா


மகளிர் பிரிமியர் லீக்கின் தொடக்க சீசனில் அதன் முதல் வெற்றியை தேடிக் கொண்டிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து அதன் 

ஐந்தாவது தோல்வியைத் தழுவியது. மும்பை DY பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்.சி.பி அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மிகவும் இறுக்கமான ரன் துரத்தலில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. எலிஸ் பெர்ரியின் மற்றும் ரிச்சா கோஷின் ரேபிட்-ஃபயர் முறையே 67 ரன்கள் மற்றும் 37 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிட்டல் அணிக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனை எதிர் கொண்ட டெல்லி கேப்பிட்டல் அணி 6 விக்கெட்டுகளுடன் 2 பந்துகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


டெல்லி கேப்பிட்டல் அணியில் மூன்று பேட்ஸ்மேன்கள் தலா 30 ரன்களுக்கு மேல் எடுத்தனர், குறிப்பாக ஜெஸ் ஜோனாசென் 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இப்போது டெல்லி கேப்பிட்டல் ஐந்து ஆட்டங்களில் நான்கு முறை வெற்றியைப் பதிவுசெய்துபுள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் நிலை சிக்கலாக மாறியபோது, அந்த சூழ்நிலையை மிகவும் திறமையுடன் கையாண்டு அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்ற ஜோனாசெனுக்கு ஆட்டநாயகி விருது வழங்கப்பட்டது.


ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஜியோசினிமாவின் WPL நிபுணரான ரீமா மல்ஹோத்ரா, நடந்து முடிந்த ஆட்டத்தில் ஜோனாசனின் விளையாட்டு அணுகுமுறையைப் பாராட்டினார். "உங்களிடம் ஜெஸ் ஜோனாசென் இருந்தால், நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. மேலும் அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து நீங்களே 'எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் ஜெஸ் ஜோனாசென் இருக்கிறார்’ என்று கூறுவீர்கள்."டெல்லி கேப்பிட்டல் அணிக்கு அதிக ரன்கள் மற்றும் பெரிய ஷாட்கள் தேவைப்பட்ட போது, ​ஜெஸ் ஜோனாசென் தனது திறமையை வெளிப்படுத்தி அற்புதமாக விளையாடி அணியை வெற்றி நிலைக்கு அழைத்துச் சென்றார். 


இதற்கிடையில், ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஜியோசினிமாவின் WPL நிபுணரான புனம் ரவுத், எலிஸ் பெர்ரியின் ஷாட் மேக்கிங்கைப் பாராட்டினார். அதே நேரத்தில் ஆர்.சி.பி அணியினர் தங்களின் அடுத்த ஆட்டத்தை எப்படி விளையாடி அணியை முன்னிலையில் நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இது மட்டுமில்லாமல் “ஆர்.சி.பி பேட்ஸ்மேன்கள் தங்களின் அணிகளுக்குள்ளே முந்தைய ஆட்டங்களில் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியவில்லை. இறுதியாக, பெர்ரியும், ரிச்சாவும் நல்ல பார்ட்னர்ஷிப்புடன் அபாரமாக விளையாடினர். இதனால் ஆர்.சி.பி அணி 150 ரன்களை எட்ட முடிந்தது. இருப்பினும், ஒரு பார்ட்னர்ஷிப் மட்டும் போதாது, மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸின் பங்களிப்பைப் போலவே அணிக்கு அதிக பார்ட்னர்ஷிப்களை உருவாக்க அதிக பேட்டர்கள் ஆர்.சி.பி-க்கு தேவைப்படுகின்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7:30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த விறுவிறுப்பான ஆட்டத்தை கலர்ஸ் தமிழ் ஜியோசினிமா, ஸ்போர்ட்ஸ்18-1, ஸ்போர்ட்ஸ்18கேல், கலர்ஸ் கன்னட சினிமா ஆகியவற்றில் நேரலையில் காணலாம்.

No comments:

Post a Comment