கனடா வாழும் தமிழர்கள் "விஜய் மக்கள் இயக்கம்" சார்பில், நடிகர் விஜய்யின் ஜூன் 22 ஆம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு, மூன்று மாதம் முன்பாகவே, இன்றிலிருந்து தங்களின் நலத்திட்ட பணிகளை தொடங்கியுள்ளனர்.
இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்களின் மருமகன் கார்த்திக், "கனடா விஜய் மக்கள் இயக்கம்" தலைவராக இருக்கிறார். பரத்வாஜ் மகளும், பாடகியுமான ஜனனி, விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். மற்றும் துணைத் தலைவர் பாலாஜி ஆகியோர் தலைமையில், கனடாவில் இன்று முதல் விஜயின் பிறந்தநாள் வரை, தினமும் 500 கிலோ உணவு மக்களுக்கு நன்கொடையாக அளிக்கிறார்கள். மற்றும் தினமும் குறிப்பிட்ட பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியை தங்களின் கார்களில் கட்டி, வலம் வர உள்ளார்கள்.
@GovindarajPro
No comments:
Post a Comment