Featured post

Mask Movie Review

Mask Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mask படத்தோட review எ தான் பாக்க போறோம். விக்ரமன் தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. Kavin ,  ...

Tuesday, 21 March 2023

அக நக முகநகையே வந்தியத்தேவன் , குந்தவையின்

 *"அக நக முகநகையே.."*


*வந்தியத்தேவன் , குந்தவையின்* *அழகான காதல் பாடல்* 

*வெளியானது*


லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணி ரத்னத்தின் "பொன்னியின் செல்வன் - 2" திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.







பிரமாண்ட தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிப்பில், மாபெரும் இயக்குநர் 

மணி ரத்னத்தின் இயக்கத்தில்

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் என பல நட்சத்திர நடிகர்களைக் கொண்ட இந்தப் படம் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது. 

“பொன்னியின் செல்வன் - 1”  கடந்த 

செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது. 


இதன் அடுத்த கட்டமாக படத்தின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில், 

சக்திஶ்ரீகோபாலன் பாடிய..

வந்தியத்தேவன் (கார்த்தி), குந்தவை (திரிஷா) இவர்கள் இடம் பெறும் காதல் பாடலாக "அக நக முகநகையே" என்ற பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

ரவி வர்மன் ஒளிப்பதிவையும், தோட்டா தரணி கலை இயக்குனராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும் மற்றும் பல நட்சத்திர தொழில்நுட்ப வல்லுநர்கள் 

மணி ரத்னத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். 


- ஜான்சன்

No comments:

Post a Comment