Featured post

7 Wonder Star Women South India 2023

 *7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation* Click he...

Thursday 23 March 2023

ஆனந்த விகடன் விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம்

 ஆனந்த விகடன் விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் !!


தமிழகத்தில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கை துறையில் முன்னணியில் இருந்து வரும் நிறுவனம் ஆனந்த விகடன். எப்போதுமே விகடனின் கருத்துக்கு அரசியல் வட்டாரத்திலும், சினிமாவிலும் பெரும் மதிப்பு உண்டு. மக்கள் மத்தியில் ஆனந்த விகடனுக்கு தனித்த மரியாதை உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆனந்த விகடன் வழங்கி வரும் சினிமாவிருதுகள் திரை வட்டாரத்தில் பெரும் மாரியாதைக்குரியதாக உள்ளது. 



2022ஆம் ஆண்டிற்கான சினிமா விருதுகளில்,  கடந்த ஆண்டு  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி,ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், வெளியான சரித்திர படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் 8 விருதுகளை அள்ளி சாதனை படைத்துள்ளது. ஒரே திரைப்படம் இத்தனை விருதுகளை வெல்வது முதல் முறை என்பது குறிப்பிடதக்கது 


பெற்ற விருதுகள் 


சிறந்த தயாரிப்பு - லைகா புரொடக்சன்ஸ் , மெட்ராஸ் டாக்கீஸ் 


சிறந்த வில்லி - ஐஸ்வர்யா ராய் 


சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர். ரஹ்மான் 


சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன் 


சிறந்த கலை இயக்கம் - தோட்டா தரணி 


சிறந்த ஒப்பனை - விக்ரம் கெய்க்வாட்


சிறந்த ஆடை வடியமைப்பாளர் ஏகா லகானி


சிறந்த அனிமேஷன் விஷுவல் எஃபெக்ட்ஸ் #NYVFXWAALA 



—Johnson

No comments:

Post a Comment