Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Friday, 31 March 2023

பிரைம் வீடியோவின் அதிரடி புலனாய்வு இணைய தொடரான சிட்டாடல்

 *பிரைம் வீடியோவின் அதிரடி புலனாய்வு இணைய தொடரான சிட்டாடல் தொடரின் புதிய முன்னோட்டத்தை இன்று பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது. இந்த தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது.*


அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO ஆகிய நிறுவனங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணைய தொடர், ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் நடித்திருக்கும் 'சிட்டாடல்'. 





விரைவில் வெளியாக இருக்கும் உலகளாவிய உளவு நாடக தொடரான சிட்டாடலின் புதிய முன்னோட்டம் பிரத்தியேகமாக வெளியிட்டி.ருக்கிறது. ஏப்ரல் 28ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்படவிருக்கும் இந்த இணையத் தொடரின் புதிய அத்தியாயங்கள், வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும். ஏப்ரல் 28 முதல் மே 25ஆம் தேதி வரை தொடர்ந்து வாரந்தோறும் வெளியிடப்படும். இந்த தொடரை ரூசோ பிரதர்ஸின் AGBO எனும் நிறுவனமும், ஷோ ரன்னரான டேவிட் வெய்லும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோருடன் ஸ்டான்லி டுசி, லெஸ்லி மான்விலே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சிட்டாடல் இணைய தொடர் வெளியாகிறது. 


எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்டாடல் எனும் உலகளாவிய சுதந்திரமான உளவு நிறுவனம் வீழ்த்தப்பட்டது. உலகில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் நிலை நிறுத்துவதற்காக பணிக்கப்பட்ட இந்த உளவு நிறுவனம், நிழல் உலகிலிருந்து உலகை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சக்தி வாய்ந்த மாண்டி கோர் எனும்  குழுவினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. சிட்டாடலில் பணியாற்றிய உயர் அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் ( பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) ஆகிய இருவரின் நினைவுகள் அழிக்கப்பட்டதால், அவர்கள் உயிருடன் தப்பினர். அன்றிலிருந்து தலைமறைவு வாழ்க்கையை புதிய அடையாளங்களுடன் வாழத் தொடங்கினர். ஒரு நாள் இரவில் அவரது முன்னாள் நண்பரான பெர்னாட் வொர்லிக் ( ஸ்டான்லி டுசி), மாண்டிக்கோர் ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக அவரது உதவியை கோருகிறார். மேசன் தனது முன்னாள் கூட்டாளியான நதியாவை தேடுகிறார். இரு உளவாளிகளும் இணைந்து உளவு பணியை மீண்டும் தொடங்குகின்றனர். 


அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO எனும் நிறுவனத்திற்காக ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ, மைக் லரோக்கா, ஏஞ்சலா ரூசோ, ஓட் ஸ்டாட், ஸ்காட் நெம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். டேவிட் வெயில் ஷோ ரன்னராகவும், நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். ஜோஷ் அப்பீல்பாம், ஆன்ட்ரெ நெமக், ஜெஃப் பிங்க்னர், ஸ்காட் ரோஸன்பர்க் ஆகியோர் இணைந்து மிட்நைட் ரேடியோவின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகின்றனர். இவர்களுடன் நியூட்டன் தாமஸ் சைகல் மற்றும் பேட்ரிக் மோரன் ஆகியோர்களும் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார்கள். 


சிட்டாடல் இணைய தொடர் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட கதைகளுடன் உலகம் முழுவதும் பயணிக்கிறது. ஒவ்வொரு தொடரும் உள்ளூரில் உருவாக்கப்பட்டு, பிராந்தியத்தில் படமாக்கப்பட்டது. மேலும் சிறந்த திறமையாளர்களைக் கொண்டு தனித்துவமான உலகளாவிய படைப்பாக உருவாகி இருக்கிறது. இந்த தொடர் ஏற்கனவே இத்தாலி மற்றும் இந்தியாவில் மாடில்டா டி ஏஞ்சலிஸ், வருண் தவான் மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோர் நடிக்கும் தொடர்களாக தயாராகி வருகிறது.


https://rb.gy/4fhn

No comments:

Post a Comment