Featured post

தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love

 *தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!* இதுவர...

Friday, 17 March 2023

பன்-டீ" என்ற பெயரில் சேரிப் பகுதிகளில் இருக்கும் சிறுவர்களின்

 "பன்-டீ" என்ற பெயரில் சேரிப் பகுதிகளில் இருக்கும் சிறுவர்களின் வாழ்க்கை மற்றும் கல்வி பற்றிய படம் உருவாகிறது. அரவிந்த் கதாநாயகனாக நடிக்கிறார்!


ஷோபியா பிரசாத் என்ற மாடலிங் பெண், கதாநாயகியாக "பன்-டீ" படத்தில் அறிமுகமாகிறார். இவர் நிறைய விளம்பர படங்களில் நடித்த அனுபவத்தோடு, தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடிப்பதை லட்சியமாக கொண்டு, களமிறங்கி உள்ளார்!




ஸ்ரீ பார்வதி சினிமாஸ் சார்பில் பிரசாத் கிருஷ்ணா, ஜீனா பிரசாத், ஷோபியா பிரசாத் மூவரும் இணைந்து, தயாரிக்கிறார்கள். பி.எஸ்.உதயகுமார் இயக்குகிறார். ரவிகிரண் திரைக்கதை, வசனம் எழுதுகிறார். ராஜாராவ் அஞ்சல்கர் ஒளிப்பதிவு செய்கிறார். பிரத்யோத்தன் இசையமைக்கிறார்!


@GovindarajPro

No comments:

Post a Comment