Featured post

Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released

 *'Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released* *Vijay Sethupathi Shines as 'Bold Kannan' in the Up...

Tuesday, 28 March 2023

அஜய் தேவ்கன் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா ட்ரீட் தரும் வகையில்

 *அஜய் தேவ்கன் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா ட்ரீட் தரும் வகையில் 'போலா' திரைப்படத்துடன் 'மைதான்' பட டீசரும் இணைந்து வெளியாகிறது*


இந்த மார்ச் 30 ஆம் தேதி அஜய் தேவ்கன் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட் காத்திருக்கிறது! அடுத்து வெளியாக இருக்கும் அவரது ஆக்‌ஷன் அட்வென்சர் திரைப்படமான 'போலா'வுடன் பெரிய திரையில் பார்வையாளர்கள் கண்டு களிக்கும் வகையில் ‘மைதான்’ படத்தின் டீசர் இணைக்கப்பட்டுள்ளது.






உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, அமித் ரவீந்தர்நாத் ஷர்மா 'மைதான்' படத்தை இயக்கியுள்ளார். பிரியாமணி மற்றும் கஜராஜ் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.


'துணிவு' படத்தின் ப்ளாக் ப்ஸ்டர் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் போனி கபூரின் Bay View Productions, அருணாவா ஜாய் சென்குப்தா மற்றும் ஆகாஷ் சாவ்லா, ஜீ ஸ்டுடியோஸூடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். சைவின் குவாட்ராஸ் மற்றும் ரித்தேஷ் ஷா ஆகியோர் திரைக்கதை மற்றும் படத்தின் வசனத்தை எழுதியுள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் 23 ஜூன் 2023 அன்று வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment