Featured post

7 Wonder Star Women South India 2023

 *7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation* Click he...

Saturday 12 August 2023

ஆகஸ்ட் 25 இல் ரிலீஸ் ஆகும் பாக்கியராஜின் 3.6.9 என்ற உலக சாதனை

ஆகஸ்ட் 25 இல் ரிலீஸ் ஆகும் பாக்கியராஜின் 3.6.9 என்ற உலக சாதனை படம்..


திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் நடிப்பில் இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில்   3.6.9 புதிய படத்தின் படப்பிடிப்பு வெறும் 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.












 தமிழ் திரையுலகில் பல்வேறு புதிய முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது புதிய சாதனை ஒன்றை தமிழ் திரையுலகில் அறிமுக இயக்குநர்  சிவ மாதவ் படைத்துள்ளார்.   


இந்த திரைப்படத்தை சுமார் 81 நிமிடங்களில் 24 கேமராக்களை கொண்டு படமாக்கி இப்படக்குழு மாபெரும் சாதனை படைத்துள்ளது.


இந்த படத்தின் கதை நாயகனாக பிரபல இயக்குனரும். நடிகருமான பாக்யராஜ் நடிக்க பி ஜி எஸ் வில்லனாகவும் பிளாக் பாண்டி, அங்கயர் கண்ணன், சுகைல்,பிரபு, கார்த்திக், கோவிந்தராஜன், சுபிக்ஷா செபி, நிகிதா, பப்லு போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்  மேலும் 60-க்கும் மேற்பட்ட நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்,அதில் வெளிநாட்டை  சேர்ந்த சில நடிகர்களும் நடித்துள்ளனர்


  இந்த படத்திற்கு மாரீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ஹர்ஷா என்பவர் இசையமைத்துள்ளார். ஆ.கே.ஸ்ரீநாத் எடிட்டிங் செய்கிறார். கலை இயக்குனராக ஸ்ரீமன் பாலாஜி பணிபுரிந்துள்ளார்.


 ஒரே நேரத்தில் 24 கேமராக்களை கொண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் படம்பிடிக்கப்பட்டது. இந்த படத்தின் உருவாக்கத்திற்காக சுமார் 600 தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஹரிபா ஹனிப் நடுவராக இருந்து, இந்த படத்தின் உருவாக்கத்தை நேரில் பார்வையிட்டு, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் என்ற அமைப்பு இந்த 3.6.9  படத்திற்கு உலக சாதனை விருதை வழங்கி உள்ளது ...


  இத் திரைப்படம் முழுக்க, முழுக்க விஞ்ஞானம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது..


 நடிகர் பாக்கியராஜ் கூறுகையில்.....


 3.6.9 திரைப்படத்தை சுமார் 81 நிமிடங்களில் படமாக்கி உலக சாதனபடைத்துள்ளார்கள்

இதில் நானும் பங்கு பெற்றேன் என்பது எனக்கு மிகுந்த சந்தோஷம்.. 


இதற்கு முயற்சி எடுத்த இயக்குனர் சிவ மாத மற்றும் தயாரிப்பாளர்

 பிஜிஎஸ் க்கு வாழ்த்துக்கள்..


இப்படம் வரும் ஆகஸ்ட் 25 உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது இந்த புது முயற்சிக்கு ஆதரவு தந்து வெற்றி பெற செய்ய ரசிகர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்..

No comments:

Post a Comment