Featured post

பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

 *’பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!* ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா,...

Sunday 13 August 2023

ஜென்டில்மேன்-2’ ஆரம்ப விழா - ஆஸ்கர் நாயகன் எம்.எம்.கீரவாணிக்கு

ஜென்டில்மேன்-2’ ஆரம்ப விழா - ஆஸ்கர் நாயகன் எம்.எம்.கீரவாணிக்கு பாராட்டு விழா!








மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-2’ . 


இப்படத்தை ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்.  

ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப்படத்தின் பாடல்களை எழுதுகிறார். சமீபத்தில் இந்தப்படத்திற்கான மூன்று பாடல்களுக்கு இசை கோர்ப்பு,  கொச்சியில் உள்ள உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலஸில் நடைபெற்றது. 


இதை அடுத்து, வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் இந்தப்படத்தின் துவக்கவிழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. 


இதனை தொடர்ந்து, ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. 

இதில், திரையுலகை சார்ந்த பலர் கலந்து கொள்கிறார்கள்.


- Johnson Pro

No comments:

Post a Comment