ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!
இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‘இசை மன்னன்’ ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடிப்பதால், ‘டியர்’ திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்து வருகிறது.
Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி மற்றும் அபிஷேக் ராமிசெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
திறமை மிகு இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரனின் அற்புதமான திரைக்கதை, மற்றும் சிறப்பான இயக்கம் ஆகியவற்றால் தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ப்ரீ புரொடக்ஷன் கட்டத்தில் திட்டமிட்டபடி படத்தின் படப்பிடிப்பு வெறும் 35 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. ‘டியர்’ படத்தின் படப்பிடிப்பு, சென்னை, இடுக்கி, குன்னூர் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ருகேஷ் படத்தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பையும் கவனித்து வருகின்றனர். ‘ராப்’ ஐகான் அறிவு இந்தப் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment