Featured post

Anali Movie Review

Anali Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம anali  படத்தோட review அ தான் பாக்க போறோம். சக்தி வாசு தேவன், சிந்தியா லூர்டே, குமாரவேல், இனியா...

Tuesday, 15 August 2023

ஏவிஎம் சரவணன், எஸ்.பி.முத்துராமன், ஆர்.எம்.வீரப்பனிடம் நேரில் ஆசிபெற்று

 ஏவிஎம் சரவணன், எஸ்.பி.முத்துராமன், ஆர்.எம்.வீரப்பனிடம் நேரில் ஆசிபெற்று ஜென்டில்மேன்-2 ஆரம்ப விழாவை நடத்தும் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்




*தனது வளர்ச்சியில் உறுதுணையாக நின்ற மூத்த ஜாம்பவான்களிடம் நேரில் சந்தித்து ஆசிபெற்று ஜென்டில்மேன்-2 ஆரம்ப விழாவை நடத்தும் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்*


இப்போது இவர் பிரமாண்டமாக தயாரிக்கும் ‘ஜென்டில்மேன்-ll’ இப்படத்தின் துவக்க விழா வரும் ஆக-19ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் கோலாகலமாக  நடைபெறுகிறது.



"நான் பிரபல வினிதோகஸ்தராக கொடிகட்டி பறக்க காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் AVM.சரவணன் சார், கே.பாலாஜி சார், ஜி.வி சார், SP.முத்துராமன் சார், ஆர்.எம்.வீரப்பன் சார், தேவர் ஃபில்ம்ஸ் சின்னப்பா தேவர் இப்படி பலர். இவர்கள் இல்லாமல் நான் இப்படி ஒரு தயாரிப்பாளராக இருக்க வாய்ப்பு இல்லை என்று கே.டி.குஞ்சுமோன் எப்போதும் சொல்வதுண்டு. 



திரையுலகில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு டிஜிட்டல் முறையில் அழைப்பு அனுப்பப்படுகின்ற  இன்றைய காலகட்டத்தில் எதையும் பிரமாண்டமாக செய்தே பழக்கப்பட்ட மெகா தயாரிப்பாளர் 'ஜென்டில்மேன் ' கே.டி.குஞ்சுமோன் அழைப்பிதழ் மூலமாக இந்த நிகழ்வுக்கு அனைவரையும் அழைக்கும் பணியை மீண்டும் ஆரம்பித்து இருக்கிறார். திரையுலகம் முழுவதும் இந்த அழைப்பிதழ் விநியோகம் செய்து வருகிறார்.


அதற்கு முன்,தனது திரையுலக பயணத்தின் வளர்ச்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து உறுதுணையாக நின்றவர்களில் ஏவிஎம் சரவணன், எஸ்.பி.முத்துராமன், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தி ஆசி பெற்றார் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். அதன்பிறகே இந்த ஆரம்ப விழாவிறக்கான அழைப்பிதழை மற்றவர்களுக்கு கொடுத்து வருகிறார். 


சினிமா என்பதே பிரமாண்டம் தான்.. ஆனால் சினிமா விழாக்களுக்கு இதுபோன்று அழைப்பிதழ் அனுப்புவது நடைமுறையில் இருந்து மறைந்தே பல வருடங்களாகி விட்ட நிலையில், அந்த பிரமாண்டத்தை மீண்டும் கொண்டு வரும் விதமாக கே.டி.குஞ்சுமோன் அனுப்பி வரும் இந்த அழைப்பிதழை திரையுலகினர் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.


ஆரம்ப விழா முடிவில் ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர்  எம்.எம்.கீரவாணி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. திரையுலகை சார்ந்த பலர் கலந்து கொள்கிறார்கள்.


ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர்  எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.


— Johnson Pro

No comments:

Post a Comment