Featured post

*#தளபதி-69 பத்திரிகை செய்தி!*

 *#தளபதி-69 பத்திரிகை செய்தி!* கே. வி. என் புரொடக்ஷன்ஸ் தமது பெருமைமிகு அடுத்த படைப்பான 'தளபதி'விஜய் அவர்களுடன் இணையும் தளபதி- 69 தம...

Friday 11 August 2023

முன்னாள் ராணுவ வீரராக ஜெய் ஆகாஷ் நடிக்கும் அதிரடி திரைப்படம்

முன்னாள் ராணுவ வீரராக ஜெய் ஆகாஷ் நடிக்கும் அதிரடி திரைப்படம்

 "எக்ஸ் ஆர்மி"


*5 மொழிகளில் தயாராகிறது*









*ஜெய் ஆகாஷ் கதை மற்றும் திரைக்கதை அமைக்கிறார்*


*சாய் பிரபா மீனா இயக்கு கிறார்* 



A Cube movies app பட நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் படம் "எக்ஸ் ஆர்மி".


இதில் ஜெய் ஆகாஷ் எக்ஸ் மிலிட்ரி ஆபிசராக நடிக்கிறார். கதாநாயகிகளாக அஷ்மிதா,  அக் ஷாயா,இவர்களுடன் இம்மான் அண்ணாச்சி, கராத்தே ராஜா பிரதான வில்லனாக  தினேஷ் மேட்னே நடிக்கிறார். மீசை ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், ராஜ்மித்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 



இப்படத்திற்கு ஜெய் ஆகாஷ் கதை திரைக்கதை அமைக்கிறார்.சாய் பிரபா மீனா  இயக்குகிறார். இவர் ஜெய்  ஆகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான யோக்கியன் படத்தை இயக்கியவர். ஜெய் ஆகாஷ் இயக்கிய படத்தில் சாய் பிரபா மீனா உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். 


ஆர்.ராம்குமார், சி. பி. சதீஷ் குமார் இணைந்து வழங்கும் இப்படத்தை   ஏ.சி.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் "ரூட்" என்ற  படத்தை இயக்கி  ஒளிப்பதிவு செய்தவர். ஜெய் விஜயம் படத்துக்கு இசை அமைத்த எஸ்.சதீஷ் குமார் இசை அமைக்கிறார். துர்காஸ் எடிட்டிங்  செய்கிறார். புதுமையான  ஸ்டன்ட் காட்சிகளை விஜய் ஜாகுவார் அமைக்கிறார். ஜோய் மதி நடனம் அமைக்கிறார். 


ராணுவத்தில் பணிபுரிந்து போரில் வீர காயத்துடன் ஓயுவு பெறும்  இராணுவ  வீரர் ஜெய் ஆகாஷ் நாட்டில் சிலர் பெண்களுக்கு எதிராக நடத்தும் வன்முறைகள், பாலியல்  துன்புறுத்தல்களை கண்டு ஆவேசம் அடைகிறார். அதை தட்டி கேட்க முடிவு செய்து ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றிய எக்ஸ் ஆர்மி மேன்கள், மற்றும் போரில் காயம் அடைந்து ஊனமுற்று இன்னும் தேச பக்தியுடன் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை  ஒரு படைபோல் திரட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் அக்கிரமக்காரர்களை தேடிப் பிடித்து ஜெய் ஆகாஷ் எப்படி பழிவாங்குகிறார் என்பதை ஆக் ஷன் அதிரடியுடன் இப்படம் சொல்கிறது.  


எல்லையை காப்பாற்றியவர்கள் நாட்டுக்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்டு அவர்களை எப்படி காக்கிறார்கள் என்பதுதான்  படத்தின்  மையக்கரு. 


இப்படத்தின் தொடக்க விழா பாடல் பதிவுடன்  இன்று ஆகஸ்ட் 11. தேதி நடந்தது. இதில் ஹீரோ ஜெய் ஆகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது.  விரைவில் படப்பிடிப்பு தொடங்கி  சென்னை, பெங்களுர், மும்பையில் நடக்கிறது.   இந்த ஆண்டு இறுதியில் இப்படம் திரைக்கு வருகிறது. 

No comments:

Post a Comment