Featured post

சிறை" திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

 *"சிறை"  திரைப்பட  முன் வெளியீட்டு விழா !!* செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் ...

Monday, 7 August 2023

சுவிட்சர்லாந்தில் இருந்து பாட வந்த ஈழத்துக் குயில்!

 சுவிட்சர்லாந்தில் இருந்து பாட வந்த ஈழத்துக் குயில்!


கவிஞர் 'சாந்தரூபி' அம்பாளடியாள், சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர். ஒரு பாடலின் நிமிடங்கள் எத்தனையோ, அத்தனை நிமிடங்கள் மட்டுமே தனது பாடல் உருவாகும் நேரம் என்கிறார் கவிஞரும், இசையமைப்பாளரும், பாடகியுமான 'சாந்தரூபி' அம்பாளடியாள். பாடல் வரிகளை தனியாக எழுதாமல், இசையுடன் பாடலாக பாடும் ஆற்றல் கொண்டவர்.






















"என்னுயிர்க் கீதங்கள்" என்ற தலைப்பில், 50' பாடல்கள் இசையமைத்து, இயக்குனர் கே.பாக்யராஜ் தலைமையில், இயக்குனர்கள் பேரரசு, செந்தில்நாதன், ராசி அழகப்பன், இசையமைப்பாளர்கள் சௌந்தர்யன், ஏ.ஆர்.ரெஹானா, பாடகர் மூக்குத்தி முருகன், கண்ணதாசன் பதிப்பகம் நிறுவனர் காந்தி கண்ணதாசன், பேச்சாளர் ஜான் தன்ராஜ் , கம்பம் குணா ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார்! பிஆர்ஓ கோவிந்தராஜ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்திருந்தார். நிகழ்ச்சியை நந்தினி தொகுத்து, வழங்கினார்!


அம்பாளடியாளின் தமிழ் புலமையும், குரல் வளமும் கேட்ட அத்தனை இயக்குனர்களும், அத்தனை இசையமைப்பாளர்களும் வியந்து, பாராட்டினார்கள். பாடல்கள் எழுதவும், பாடவும் தமிழ் திரையுலகில் தற்போது வாய்ப்பு பெற்றுள்ளார்! விரைவில் இந்த ஈழத்து குயிலின் குரல், வெற்றிப் படங்களில் ஒலிக்கும்!


@GovindarajPro

No comments:

Post a Comment