Featured post

மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-இல் செப்டம்பர் 26 முதல்

 *மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-இல் செப்டம்பர் 26 முதல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது !* ~ இ...

Wednesday, 16 August 2023

படம் பார்க்கும் ஏழு ரசிகர்களுக்கு தங்க மோதிரம்!

 படம் பார்க்கும் ஏழு ரசிகர்களுக்கு தங்க மோதிரம்!


சத்யமூர்த்தி ஜெயகுரு கதையின் நாயகனாக நடித்து, சத்ய சுதா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கியுள்ள படம் "ஆன்மீக அழைப்பு"!


மறுஜென்மம் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், உண்மை கதையையும் உள்ளடக்கிய திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக இயக்கியுள்ளார் சத்யமூர்த்தி ஜெயகுரு.


சத்யமூர்த்தி ஜெயகுரு, சுபிக்ஷா, ஆதேஷ் பாலா, சிக்கல் ராஜேஷ், கோபிநாத், சதீஷ் வாரியார், புதுமுகம் மீனா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.ராஜன் பாடல் எழுதியுள்ளார்.


படத்தில் அரசர் காலத்து மோதிரம் ஒன்று, பல மர்ம முடிச்சுகளை அவிழ்கிறது. படம் பார்க்கும் ரசிகர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடையளிக்கும் ரசிகர்கள் ஏழு பேருக்கு அரை பவுன் தங்க மோதிரம் பரிசளிக்கப்பட உள்ளது.


இம்மாதம் திரைக்கு வர தயாராக உள்ளது ஆன்மீக அழைப்பு! தங்க மோதிரம் அணிய தயாராக இருங்கள் என்கிறார் இயக்குனர் சத்யமூர்த்தி ஜெயகுரு!


@GovindarajPro

No comments:

Post a Comment