Featured post

7 Wonder Star Women South India 2023

 *7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation* Click he...

Sunday 6 August 2023

HighOnU1 - Live In Concert

HighOnU1 - Live In Concert

சினிமா துறையில் என்றுமே இசை அமைப்பாளர்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இந்த வரிசையில் Little Maestro என்று அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி நேற்று (5.8.2023) சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது. 








இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் ஹரிஹரன் , ஆண்ட்ரியா, ராகுல் நம்பியார், பிரேம்ஜி, ரஞ்சித், திவாகர், எம் சீ சனா, மதிசயம் பாலா, விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா, சிவாங்கி, பிரியங்கா என்று பலரும் கலந்து கொண்டு பாடல்களை பாடினர். 


இந்நிகழ்ச்சியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரில் கண்டு களித்தனர். சென்னையில் சமீப காலங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு ருசிகர நிகழ்வாக மேடையில் விழா அமைப்பாளர்களான Noise and Grains நிறுவனம் மற்றும் விளம்பரதாரர்கள், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஒரு இரு சக்கர வாகனத்தை பரிசளித்தனர், அதை அவர் அவருடைய ரசிகர் ஒருவருக்கு மேடையிலேயே பரிசளித்தார்.

No comments:

Post a Comment