Featured post

7 Wonder Star Women South India 2023

 *7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation* Click he...

Tuesday 8 August 2023

மைக்கேல் எனும் Multi Talented நடன கலைஞர், மேடை நாடக நடிகர்

 மைக்கேல் எனும் Multi Talented 

நடன கலைஞர், மேடை நாடக நடிகர், தொலைக்காட்சி தொடர் நாயகன் அதனை தொடர்ந்து ஜோடி நம்பர் 1 இல் சாம்பியன், மைக்கேல். இப்பொழுது   மிகுந்த தன்னம்பிக்கையுடன் பெரிய திரைக்குள் அடியெடுத்து வைத்து பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.


திரைப்படங்களில் தனக்கு கிடைக்கும் வாய்புகளை மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டு , நடனம், நடிப்பு, சண்டைக்காட்சிகள் என்று தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி தன்னை தேர்வு செய்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் Good Book இல் இடம் பிடித்துவிட்டார் மைக்கேல்.




விளைவு , வருடத்திற்கு நான்கு நல்ல படங்கள் என்கிற அளவில் இவரது திரைப்பயணம் ஏறுமுகமாக ஆகியிருக்கிறது


"கனிமொழி, நளனும் நந்தினியும், பர்மா, பதுங்கி பாயும் தல, ஊமை செந்நாய், வார்டு126, N4, ,ஆரகன் சபாநாயகன் இன்னும் பெயரிடப்படாத நான்கு படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன்.


அதிஷ்டவசமாக அவற்றுள் பெரும்பாலான படங்கள், மிகவும் அழுத்தமான கதையம்சமுள்ள படங்கள், எனது கதாபாத்திரங்களும் நிச்சயம் பேசப்படும்.." என்று நம்பிக்கை தெரிவிக்கும் மைக்கேல், எண்ணிக்கைக்காக அல்லாமல் ரசிகர்களின் எண்ணத்தில் எப்போதும் நிலைத்து நிற்கும் படியான கதைகளில் நடிக்கவே மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.

No comments:

Post a Comment