Featured post

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம்

 *பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம் 20ந்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்* சினிமாவில் நாளுக்கு நாள் எ...

Wednesday 9 August 2023

SRK யுனிவர்ஸ் கொண்டாட்டம், 52 நகரங்களில் சிறப்புத் திரையிடலுடன்

 SRK யுனிவர்ஸ் கொண்டாட்டம்,  52 நகரங்களில் சிறப்புத் திரையிடலுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின்  10 ஆம் ஆண்டை கொண்டாடும் ரசிகர்கள்  !!   இன்னும் ஒரு மாதத்தில் திரைக்கு வருகிறது ஜவான் !!

சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வெளிவந்து  10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஷாருக்கான் யுனிவர்ஸ், ஜவான் திரைக்கு வரும் வரை,  52 நகரங்களில் ஒரு மாதத்திற்கு  சென்னை எக்ஸ்பிரஸ் சிறப்புத் திரையிடலை நடத்த உள்ளது.

SRK யுனிவர்ஸ் ஜவான் விளம்பரப் பிரச்சாரத்தை பிரம்மாண்டமான முறையில் தொடங்கியது, இதன் ஆரம்பமாக, சென்னை எக்ஸ்பிரஸ் திரையிடலை 52 நகரங்களில் ஏற்பாடு செய்கிறது!

கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ஜவான்" திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான 'வந்த எடம்' பாடல் மற்றும் ப்ரிவ்யூ படத்தின் மீதான பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வருவதால், ஷாருக்கானின் மிகப்பெரிய ரசிகர் மன்றமான SRK யுனிவர்ஸ், இரண்டு பெரிய மைல்கற்களைக் கொண்டாட ஒரு தனித்துவமான விளம்பரப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது - சென்னை எக்ஸ்பிரஸின் 10 ஆண்டு கால வெற்றி மற்றும் ஜவான் ரிலீஸுக்கு ஒரு மாதம் நிலையில், #10YearsOfChennaiExpress மற்றும் #1MonthToJawan என்ற ஹேஷ்டேக்குகளுடன் உற்சாகமாக கொண்டாடி வருகிறது . SRK யுனிவர்ஸ் SRK படங்களின் பிரமாண்டமான விளம்பரங்களுக்காக புகழ்பெற்றது, ஜவான் திரைப்படமும் இதில் விதிவிலக்கல்ல. இந்த நேரத்தில், அவர்கள் செப்டம்பர் 7 ஆம் தேதி ஜவான் திரைக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 9 ஆம் தேதி 52 க்கும் மேற்பட்ட நகரங்களில் பிளாக்பஸ்டர் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்பட சிறப்பு காட்சிகளுடன்  10 ஆண்டு நிறைவை நினைவுகூறவுள்ளது ஷாருக் மற்றும் தீபிகா ரசிகர்களுக்கு இது மிக மகிழ்ச்சியான தருணம், ரசிகர்கள் தவறவிடக்கூடாத கொண்டாட்டம்.



வெகு சுவாரஸ்யம் என்னவெனில், ஜவானின் முதல் பாடலான வந்த எடம், சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ஜவான் இடையேயான வலுவான தொடர்பான,  லுங்கி ட்ரெண்டை ரசிகர்கள் இணையத்தில் முன்னணியில் கொண்டு வந்துள்ளனர். இந்தப் பாடலில் 1000க்கும் மேற்பட்ட பின்னணி நடனக் கலைஞர்கள் லுங்கி அணிந்திருந்ததாகத் தெரிகிறது. இதனுடன் சேர்த்து, சென்னை எக்ஸ்பிரஸில் இருந்து '1234 கெட் ஆன் தி டான்ஸ் ஃப்ளோர்' பாடலில் ஷாருக்கானுடன் இணைந்த பிரியாமணியையும் இந்தப் பாடல் மீண்டும் கொண்டுவருகிறது. இந்த தொடர்பு குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 



பாட்னா, பத்ரௌனா, சோலாப்பூர், மாலேகான், கோட்டா, ராஜ்கோட், ஜல்கான், நாக்பூர், துப்ரி, வதோதரா, உதய்பூர், சாங்லி, சப்ரா, பீகார், டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சித்தோர்கர், வாரங்கல், அவுரங்காபாத், நாக்டா, ஜோத்பூர், துலே, பெங்களூரு, ஹைதராபாத், பெர்ஹாம்பூர், அகமதாபாத், மும்பை, சிகார், புனே, நாந்தேட், போபால், வடக்கு லக்கிம்பூர், சிலிகுரி, சென்னை, லத்தூர், காஷிபூர், பீட், பீதானா (MH), குவஹாத்தி, சிச்சார், வாரணாசி, சந்திரபூர், பர்த்வான், ரத்னகிரி, புவனேஸ்வர், இந்தூர், திரிபுரா  உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் சென்னை எக்ஸ்பிரஸை திரையிட ரசிகர் மன்றம் திட்டமிட்டுள்ளது.



 ஷாருக்கான் இந்தியா மட்டுமல்லாது  உலகம் முழுக்க  மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார், அவருக்காக ரசிகர் மன்றம் ஒரு திரையிடலை ஏற்பாடு செய்வது இது முதல் முறை அல்ல; கடந்த ஆண்டு ஷாருக்கானின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றான ஓம் சாந்தி ஓம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பதான் ரிலீஸுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பும் அப்படத்தை திரையிட ரசிகர்கள் ஏற்பாடு செய்தனர். அதன் மூலமாக #15YearsOfOmShantiOm கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment