*அக்டோபர் 19ல் ஐமேக்ஸ்-R-ல் லியோ அனுபவத்தை உணருங்கள்*
*செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவில் இருந்து புதிய தமிழ் மொழி காவியம் உலகம் முழுக்க ஐமேக்ஸ் வெளியீட்டை பெறுகிறது*
*சென்னை, இந்தியா - அக்டோபர் 12, 2023*
அக்டோபர் 19ஆம் தேதி ‘லியோ’ திரைப்படத்தின் பிரத்யேகமான ஐமேக்ஸ் ரிலீஸ் இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுக்க உள்ள கூடுதல் சந்தைகளிலும் வெளியிடுவதை அறிவிப்பதில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பரவசமடைகிறது. தயாரிப்பாளர் S.S.லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ஒரு இந்திய தமிழ் மொழி ஆக்சன் திரில்லர் படம் தான் ‘லியோ’. இப்படத்தில் தளபதி விஜய், த்ரிஷாவுடன் சஞ்சய் தத், அர்ஜுன் சார்ஜா, கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியா முழுவதும் மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவையும் சேர்த்து அங்குள்ள ஐமேக்ஸ் வசதியுள்ள இடங்களில் ‘லியோ’ ரிலீஸாக இருக்கிறது. இதுவரை ஐமேக்ஸில் திரையிடப்படும் மூன்றாவது திரைப்படம் என்பதுடன் தளபதி விஜய் மற்றும் S.S.லலித்குமார் கூட்டணியில் ஐமேக்ஸில் வெளியாகும் முதல் படம் என்கிற அடையாளத்தையும் பெறுகிறது.
“தொடர்ந்து முதல் தரமான திரையரங்கு அனுபவத்தை உலகமெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு வழங்கிவரும் ஐமேக்ஸுடன் பணிபுரிவுதில் நாங்கள் பரவசமடைகிறோம். ஐமேக்சில் வெளியாகும் மூன்றாவது திரைப்படத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மேலும் தளபதி விஜய்யின் நிஜமான கச்சிதமான நடிப்பாற்றலை இந்தவிதமான தொழில்நுட்ப தளத்தில் ரசிகர்கள் பார்த்து ரசிக்க இயலும்” என்கிறார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சேர்மன் லலித்குமார்.
“தொலைநோக்கு பார்வை கொண்ட திறமையாளர்களான தளபதி விஜய் மற்றும் S.S.லலித்குமார் ஆகியோருடன் ‘லியோ’வில் கூட்டணி சேர்ந்ததற்காக நாங்கள் பெருமைப்படுவதுடன் சினிமா ரசிகர்களுக்கு ஐமேக்ஸில் இந்த காவியத்தை காணும் வாய்ப்பையும் வழங்குகிறோம்.” என்கிறார் ஐமேக்சின் சர்வதேச மேம்பாடு மற்றும் விநியோக துரையின் துணைத்தலைவரான கிறிஸ்டோபர் டில்மேன். ரசிகர்கள் இந்த ஆக்சன் நிறைந்த படத்தை முடிந்தவரை பெரிய திரையில் கண்டுகளிக்க விரும்புவார்கள் என்பது எங்களுக்கு தெரியும் என்பதால் அவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை தரும் அந்த வசதியை ஐமேக்சில் வழங்குவதற்கு எங்களால் காத்திருக்க முடியாது. லோகேஷ் கனகராஜின் தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்கத்துடன் ஐமேக்ஸ் அல்ட்ரா ஸ்கிரீன் மற்றும் தரமான ஒலிநுட்பம் ஆகியவற்றுடன் இணைந்து வரும் ‘லியோ’ படத்தின் ஆக்சன் காட்சிகளுடனும் சென்னை மற்றும் காஷ்மீர் அழகான லொக்கேசன்களுடனும் பிரமிக்க வைக்கும். இந்தப்படம் 26 இடங்கள் வரை ஐமேக்ஸ் நெட்வொர்க் இந்தியாவுடன் வெளியாகிறது. அக்-19ல் ‘லியோ’ திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாக இருக்கிறது. வரும் அக்-14 முதல் டிக்கெட்டுகள் விற்பனை துவங்க உள்ளது. உங்களது அருகாமையில் உள்ள திரையரங்குகளில் இருக்கை வசதிகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
*செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பற்றி*
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்பது சென்னையில் உள்ள ஒரு சுயாதீன தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பரந்த நெட்வொர்க்குடன் திரைப்படங்களைத் தயாரிக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ உணர்வு மற்றும் வலுவான ஸ்கிரிப்ட் மூலம் புதுமையான உள்ளடக்கத்தை உருவாக்குகிறது. 2017ல் S.S லலித் குமார் அவர்களால் நிறுவப்பட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ குறிப்பிடத்தக்க திரைப்படங்களை தயாரித்து விநியோகித்துள்ளது. 2018-2019 வரை பல விருதுகளை வென்ற “96” திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பெருமையுடன் விநியோகித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் குறிக்கோள், சரியான உணர்ச்சி, படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்துடன் பார்வையாளர்களுக்கு தரமான திரைப்படங்களை உருவாக்குவதாகும்.
*ஐமேக்ஸ் கார்ப்பரேஷன் பற்றி*
ஐமேக்ஸ் என்பது தனியுரிம மென்பொருள், கட்டிடக்கலை மற்றும் உபகரணங்களை ஒன்றிணைத்து, உங்கள் இருக்கைக்கு அப்பால் நீங்கள் நினைத்துப் பார்க்காத உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் அனுபவங்களை உருவாக்கும் ஒரு பொழுதுபோக்கு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, . சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டுடியோக்கள் அசாதாரணமான முறையில் பார்வையாளர்களுடன் இணைக்க ஐமேக்ஸ் அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. உலகெங்கிலும் உள்ள முக்கிய நிகழ்வுத் திரைப்படங்களுக்கான மிக முக்கியமான மற்றும் வெற்றிகரமான திரையரங்கு விநியோக தளங்களில் ஐமேக்ஸின் நெட்வொர்க்கை உருவாக்குகிறது.
ஐமேக்ஸ் நியூயார்க், டொராண்டோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸை தலைமையிடமாக கொண்டது. மேலும் லண்டன், டப்ளின், டோக்கியோ மற்றும் ஷாங்காய் ஆகிய இடங்களில் கூடுதல் அலுவலகங்களை கொண்டுள்ளது. ஜூன் 30, 2023 நிலவரப்படி, 87 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 1,718 ஐமேக்ஸ் அமைப்புகள் (1,638 வணிக மல்டிபிளக்ஸ்கள்.12 வணிக இலக்குகள், 68 நிறுவனங்கள்) இயங்கி வருகின்றன. சைனா வைத்துள்ள ஐமேக்ஸ் பங்குகள் ஐமேக்ஸ் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான, ஹாங்காங் பங்குச் சந்தையில் "1970" என்ற பங்குக் குறியீட்டின் கீழ் வர்த்தகம் செய்யப்படுகிறது.
IMAX®, IMAX®Dome, IMAX®3D, IMAX®3D Dome, IMAX® IMAX அனுபவம்®, ஒரு IMAX அனுபவம்®, ஒரு IMAX 3D ®, IMAX DMR®, DMR®, IMAX IMAX LIVE™, IMAX Enhanced™, IMAX n Xos®, SSIMWAVE® மற்றும் Films to the Fullest® ஆகியவை பல்வேறு அதிகார வரம்புகளின் சட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அல்லது பாதுகாக்கப்பட்ட நிறுவனத்தின் அல்லது அதன் துணை நிறுவனங்களின் வர்த்தக முத்திரைகள் மற்றும் வர்த்தகப் பெயர்கள். மேலும் தகவலுக்கு, www.imax.com ஐப் பார்வையிடவும். lnstagram (www.instagram.com/imax), Facebook (www.facebook.com/imax), Twitter (www.twitter.com/imax) ஆகியவற்றிலும் IMAX உடன் இணைக்கலாம். , YouTube (www.youtube.com/imaxmovies) மற்றும் Linkedln (www.linkedin.com/imax).
No comments:
Post a Comment