Featured post

Sai Durgha Tej personally visited Amma Orphanage

 *Sai Durgha Tej personally visited Amma Orphanage to donate the promised amount* Supreme Hero Sai Durgha Tej is renowned for his compassion...

Friday 13 October 2023

டைகர்’ தனது வெறும் கைகளாலேயே மக்கள் படையை எதிர்கொள்வான்

 *”’டைகர்’ தனது வெறும் கைகளாலேயே மக்கள் படையை எதிர்கொள்வான்” : சல்மான்கான்*



சூப்பர்ஸ்டார் சல்மான்கான் யஷ்ராஜ் பிலிம்ஸின் டைகர்-3 படத்தின் டிரைலரை வரும் அக்-16ஆம் தேதி வெளியிட இருக்கிறார். இரும்புச்சங்கிலி அணிந்த வெறும் கைகளால் எதிரிகளை கிழித்தெறிய தயாராகும் டைகராக இதுவரை பார்த்திராத சல்மான்கானின் தோற்றத்தில் இப்படத்தின் டிரைலர் பிற்பகல் 12 மணி அளவில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.


இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் யதார்த்தாமான ராவான ஆனால் கண்கவரும் விதமாக இருக்கும் என கூறுகிறார் சல்மான்கான். இந்த புதிய தோற்றம் டிரைலரிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை தீர்மானிப்பதாக இருக்கும். டைகர் தன்னுடைய விரோதிகளை அழிப்பதற்காக முரட்டு சக்தியுடன் வேட்டையில் இறங்குவார். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் திரில்லரான டைகர்-3 தீபாவளி பண்டிகையில் வெளியாக இருக்கிறது. 


“டைகர்-3யில் ஆக்சன் காட்சிகள் ராவாக, யதார்த்தமாக மற்றும் கண்கவருதாக இருக்கும். இது சாதரணமாக இந்த உலகத்திற்கு வெளியே இருக்கும். இந்த டைகர் பட வரிசையில் நான் எதை விரும்புகிறேன் என்றால் தனது வெறும் கைகளாலேயே மக்கள் படையை எதிர்கொள்ள முடிகின்ற ஹிந்திப்படங்களின் பிரமாண்ட கதாநாயகனாக ‘டைகர்’ காட்டப்பட்டு இருப்பதுதான். அவனை சுற்றியுள்ள அனைவரையும் முடிக்கும் வரை இன்னும் நின்றுகொண்டே அவன் ரத்தம் சிந்தவும் தயாராக இருக்கிறான்” என்கிறார் சல்மான்கான். 


“டைகரின் ஹீரோயிசம் என்பது சவாலை முன்னெடுத்து செல்லும்போது பின்வாங்காமல் நிஜமான புலி எப்படி வேட்டையாடுமோ அதுபோல அவனுடைய இரையை வேட்டையாடுவதுதான். என்னுடைய கதாபாத்திரமான டைகர் சண்டையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டான். அவன் சுவாசிக்கும் வரை ஒருபோதும் விட்டுவிட மாட்டான்.. மேலும் இந்த நாட்டுக்காக போராடும் கடைசி மனிதனாக அவன் இருப்பான்” என்கிறார் சல்மான்கான்.


மேலும் அவர் கூறும்போது, “யஷ்ராஜ் பிலிம்ஸ் மூலமாக பெரிய திரையில் ‘டைகர்’ எப்படி காட்டப்பட்டு இருக்கிறது என்பதை நான் ரசிக்கிறேன். அதுதான் ரசிகர்களின் ரசனையை இழுத்து பிடித்திருக்கிறது, அவர்கள் டைகரை ஆக்சனில் பார்க்க விரும்புகிறார்கள்.. ஏனென்றால் எப்போதும் பார்த்திராத கரடுமுரடான மற்றும் கூலான ஆக்சன் காட்சிகளை பார்ப்பார்கள் என்பது  அவர்களுக்கு தெரியும். அவர்கள் டைகர்-3 டிரைலரை விரும்புவார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் இன்றுவரை மக்கள் பார்த்திராத பித்துப்பிடிக்க வைக்கும் மூர்க்கத்தனமான ஆக்சன் தருணங்களை இது கொண்டுள்ளது” என்கிறார் . 


மனீஷ் சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டைகர்-3’ படத்தின் டிரைலர் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்புடன் இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 100 சதவீத பிளாக்பஸ்டர் ரிசல்ட்டை வழங்கிய யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸை ஆதித்யா சோப்ரா எவ்வாறு வடிவமைத்திருக்கிறார் என்பதற்கான அடுத்த அத்தியாயத்தை இந்தப் படம் வெளிப்படுத்த உள்ளது. இதுவரை யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார், பதான் வரிசையில் இப்போது டைகர் 3 இணைந்திருக்கிறது..

No comments:

Post a Comment