Featured post

Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy

 *Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy The Raja Saab Drops Thrilling Motion Poster* *Pra...

Thursday 5 October 2023

KANNUR SQUAD Movie Review

KANNUR SQUAD Movie Review 

வணக்கம் மக்களே, நம்ம இப்போ பாக்க போற படம், Roby varghese raj  இயக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு Investigation thriller movieயான 'Kannur squad '. இந்த படத்தோட இசைமைப்பாளர் sushin shyam. இந்த படத்துல mammooty, rony david raj, arjun radhakrishnan, azees nedumangad,kishore, vijayaraghavan, shabareesh varma போன்ற பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்த Mammootyயின் சொந்த தயாரிப்பான 'Mammooty kampany' தயாரிச்சிருக்காங்க. இந்த படம் 2007 இல் இருந்து 2013க்கிடையே நடந்த உண்மை சம்பவத்தை மையமா வச்சு எடுத்திருக்காங்க. உண்மையில் Kannur squadங்கிறது முன்னாள்   kannur SP,  S. Sreejith அவர் உருவாக்குன investigation team.

Mammooty, george கேரக்டர்ல subinspectorஆ நடிச்சிருக்காரு. Rony david raj - jeyakumar கேரக்டர்லையும், Arjun radhakrishnan - ameer கேரக்டர்லயும், azees nedumangad - jose skaria கேரக்டர்லயும் நடிச்சிருக்காங்க.

இந்த நாலு பேரு சேர்ந்தது தான் KANNUR SQUAD.

இப்போ இந்த படத்தோட கதை என்னனு பாப்போம். Kannur squad ரொம்ப சிக்கலான cases  கண்டுபிடிக்குறதுல திறமையானவங்க. ஆரம்பத்துல இந்த squadஅ காட்டும் போதே, ஒரு case investigation பண்ற மாதிரி அவங்களை  அறிமுகப்படுத்துறாங்க. அதுமூலமா அந்த squad ஓட திறமையை தெரிவிக்கிறாங்க. Kasaragodங்கற இடத்துல Abdul wahabங்கிற ஒரு அரசியல்வாதி கொடூரமான முறையில  கொலை செய்யப்படுறாரு. மாஸ்க் போட்டு ஒருத்தன் வீட்டுக்குள்ள வந்து  கொலை பண்ணிட்டு தப்பிச்சிடுறான். இந்த கொலையை பத்தி விசாரிச்சு கொலையாளிய  குறுகிய காலத்துல கண்டுபிடிக்க சொல்லி kannur squadஅ நியமிக்கிறாங்க. இந்த team ஓட மேலதிகாரியா, மனு நீதி சோழன் கேரக்டர்ல - கிஷோர் நடுச்சிருக்காரு. படம் இப்படி தான் ஆரம்பிக்குது.

இந்த கொலையாளிய கண்டுபிடிக்க kasaragodல ஆரம்பிச்சு kannur, வயநாடு, எர்ணாகுளம், திருவனந்தபுரம், பாலா, belgaum, மங்களூர், கோவை,  பூனே, மும்பை, uttarpradeshனு 3000km பயணம் பண்றங்க. ஆனால் அவங்களுக்கு குறிப்பிட்ட ஊதியம் தராததால், அவங்க கார்ல பயணம் பண்றங்க. இதனால காவல்துறை பல முரண்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  குற்றவாளிகள் வெகுதூரம் விலகிச் செல்லும்போது, ​​சாலையில், வாகனம் ஓட்டி நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது. ஜார்ஜ் தன்னோட squad கிட்ட, தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்ததை விட இந்த வேனில் அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டதாக சொல்லறாரு. அந்த அளவுக்கு tatasumo வும் இந்த படத்தில் ஒரு கதாபத்திரமா இருக்கு.இந்த பயணத்துல அவங்களுக்கு நிறைய விதமான சிக்கல்கள் வருது. வட மாநிலங்கள்ல கடந்து போகும் போது அந்த மக்கள் மூலமாக நிறைய பிரச்சனைகள் வருது.அது ஒரு சில ஆக்ஷன் சீக்வன்ஸ் மூலமாகவும் காட்டி இருக்காங்க. மேலும் அவங்க squadல இருக்குற ஒருதாரே லஞ்சம் வாங்குறாரு. இத்தனை பிரச்சனையும் தாண்டி, ஒற்றுமை இந்த கேஸ் எப்படி கண்டுபிடிக்குறாங்கன்றதுதா கதை. படத்தோட முதல் பாதி investigation thrillerஅ போகுது, இரண்டாம் பாதி action கலந்து எப்படி  கொலையாளிய கண்டுபிடிக்கிறாங்கனு சொல்லிருக்காங்க.mammooty அவரோட நடிப்ப பத்தி சொல்லவே தேவ இல்ல. அதுவும் இந்த மாதிரி investigation storyன்னா இன்னும் ஸ்பெஷல் தான். ஒரு ஒரு நடிகர்களும் தனக்கு தரப்பட்ட கதாபாத்திரத்தை ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. மனுநீதிச் சோழனாக நடித்திருக்கிற கிஷோர் பத்தி சொல்லவே தேவையில்லை. ரொம்ப நல்லா ஆக்டர். ஒரு சிறந்த மேலதிகாரிய நல்லாவே நடிச்சிருக்காரு. ஒரு சீன்ல அவர் சொல்ற வசனம் என்னன்னா, "எனக்கு மேல இருந்து கொடுக்குற எந்த பிரஷரும் நான் உங்க மேல திணிக்கிறது இல்ல அது என்னோட மரியாதை அதே மாதிரி இந்த கேஸ கண்டுபிடிச்சு முடிக்கிறது உங்களோட மரியாதை" அப்படின்னு சொல்லி இருக்காரு அது ரொம்பவே நல்லா இருந்தது. Squadல ஒருத்தர் எதுக்கு லஞ்சம் வாங்குனாரு, கொலைக்கு என்ன காரணம்னு தெளிவா சொல்லிருக்காரு.

டைரக்டருக்கு இதுதான் முதல் படம் ஆனால் முதல் படம் சொல்ல முடியாத அளவுக்கு ரொம்பவே அருமையா டைரக்ட் பண்ணி இருக்காரு. காவல்துறை இந்த சமுதாயத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவங்க அவங்க எந்த மாதிரியெல்லாம் நமக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்பதை ரொம்ப அருமையா சொல்லி இருக்காங்க. இரண்டாவது பாதில நடக்கிற ஆக்சன் சீக்குவன்ஸ்கூட , sushin shyamவோட மியூசிக்கும் இணையும் போது பாக்குறதுக்கு ரொம்ப powerfulla இருக்கு. படம் second halfல கொஞ்சம் lengthyயா ஸ்லோவா மூவ் ஆகுற மாதிரி தெரிஞ்சா கூட,  நல்ல ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் மூவி பார்த்த திருப்தி இருக்கு.

No comments:

Post a Comment