Featured post

_SS Rajamouli on watching Avatar: Fire and Ash, “I was like a child in the theatre” as James Cameron expresses his desire to visit Rajamouli’s film set!_

 _SS Rajamouli on watching Avatar: Fire and Ash, “I was like a child in the theatre” as James Cameron expresses his desire to visit Rajamoul...

Thursday, 16 November 2023

டைகர்-3-ல் சல்மான் மற்றும் என்னுடைய மோதலை மக்கள் கொண்டாடுவதை

 *"டைகர்-3-ல் சல்மான் மற்றும் என்னுடைய மோதலை மக்கள் கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!"என்கிறார் இம்ரான் ஹாஷ்மி.*



யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பான டைகர்-3 இல் இம்ரான் ஹாஷ்மி

தனது வில்லத்தனமான திருப்புமுனை ஏற்படுத்தும் நடிப்பின் மூலம் ஒவ்வொரு காட்சியிலும் நாட்டின் மிகப்பெரிய அதிரடி சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் நேருக்கு நேர் மோதும் போதும் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.


யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் டைகர்-3 பிரமிக்க வைக்கும் அளவில் வெறும் 4 நாட்களில் உலகளவில் 169.75 கோடி நிகர வசூலையும் 272 கோடி மொத்த வசூலையும் பதிவு செய்துள்ளது, மேலும் மற்றொரு பெரிய வார இறுதி வசூலை வெள்ளிக்கிழமை முதல்

பதிவு செய்ய உள்ளது! தன் மீதும் டைகர்-3-ன் மீதும் மக்கள் பொழியும் அன்பால் சிலிர்த்துப் போயிருக்கிறார் இம்ரான்!


இம்ரான் கூறும்போது, ​​“டைகர்-3-ன் படத்திற்கு கிடைத்த வரவேற்பையும், எனது நடிப்பின் மீது மக்கள் எந்த அளவிற்கு அன்பைப் பொழிந்திருக்கிறார்கள் என்பதையும் கண்டு நான் சிலிர்த்துப் போயிருக்கிறேன். நாங்கள் ஒரு நல்ல நோக்கத்தோடு படத்தை தொடங்கினோம், மேலும் படம் உலகளவில் ரசிகர்களை மகிழ்விக்கும் என்று எதிர்பார்த்தேன்.  ஆன்டி-ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை நான் மிகவும் ரசித்தேன், மேலும் நம் நாட்டின் மிகப்பெரிய அதிரடி சூப்பர் ஸ்டாரான சல்மான் கானுடன் நேருக்கு நேர் மோதுவதை விட வேறேது சிறந்ததாக இருக்கும்!  எங்கள் மோதலை மக்கள் ரசித்து மகிழ்ந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அது எனக்கு சிறந்த மதிப்பீடாகும்".


அவர் மேலும் கூறுகையில், “நான் எப்போதுமே நான் தேர்வு செய்யும் திரைப்படங்களின் மூலம் மக்களை மகிழ்விக்க விரும்புவேன் மற்றும் ஒரு எதிர்மறையான  கதாபாத்திரத்திம்  நான் இதுவரை முயற்சி செய்யாத விஷயங்களை முயற்சிக்க சுதந்திரம் அளித்தது.  எனது வில்லத்தனமான திருப்புமுனை கதாபாத்திரத்திரத்தை ரசித்ததற்காகவும், டைகர்-3 படத்தை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக மாற்றியதற்காகவும் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மணீஷ் ஷர்மா இயக்கத்தில் உருவான டைகர்-3 இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment