Featured post

Avatar: Fire and Ash Emerges as the Biggest Hollywood Film of 2025 in India, Dominates Christmas Holiday Season

 *Avatar: Fire and Ash Emerges as the Biggest Hollywood Film of 2025 in India, Dominates Christmas Holiday Season* James Cameron’s Avatar: F...

Wednesday, 8 November 2023

தீபாவளி விருந்தாக குடும்பத்துடன் கொண்டாடும்படியான படமாக

 *தீபாவளி விருந்தாக குடும்பத்துடன் கொண்டாடும்படியான படமாக விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ திரைப்படம் வெளியாகிறது!*



















நடிகர் விக்ரம் பிரபு நடித்த ஆக்ஷன் கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமான ’ரெய்டு’ நவம்பர் 10, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார் மற்றும் இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இப்படத்தை எம் ஸ்டுடியோஸ், ஓப்பன்ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் ஆகியவற்றிற்காக தயாரிப்பாளர்கள் கே கனிஷ்க் & ஜிகே @ ஜி.மணிகண்ணன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.


இயக்குநர் கார்த்தி படத்தின் கதை குறித்து சொன்னபோது அதில் ஆக்‌ஷன், எமோஷன், காதல், நடனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இருப்பதை உறுதியாக உணர்ந்ததாக நடிகர் விக்ரம் பிரபு இந்தப் படம் குறித்து பகிர்ந்துள்ளார். மேலும், தான் கமர்ஷியல் வளையத்திற்குள் படம் நடிப்பது குறித்து எப்போதும் அதிகம் யோசிப்பேன் என்றும் ஆனால், இப்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வெளியீட்டைப் பார்த்த பிறகு இயக்குநர் கார்த்தி தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக காட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.


’ரெய்டு’ சமூக பிரச்சனையுடன் கூடிய ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என இயக்குநர் கார்த்தி கூறியுள்ளார். ’ரெய்டு’ படத்தின் திரைக்கதையை தான் எழுதும்போது, கதாநாயகனின் கதாபாத்திரம் பக்கத்து வீட்டு பையன் போலவும் வேண்டும் அதே சமயம், மாஸ் ஹீரோவாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் அதற்கேற்ப, விக்ரம் பிரபு இருந்தார் எனவும் கூறியுள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு அவர்தான் சரியானவர் என்று ஒட்டுமொத்த டீமும் கருதியது என்றார். மாஸ் மற்றும் யதார்த்தமான களங்களில் நடித்து ஏற்கனவே தனது திறமையை நிரூபித்துள்ள விக்ரம் பிரபு இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முழு உழைப்பைக் கொடுத்துள்ளார் என்றவர் இயக்குநர் முத்தையா சாரின் வசனங்கள் இந்தப் படத்தை வணிக ரீதியாக எடுத்துச் செல்வதற்கு பெரும்பலமாக அமைந்து கமர்ஷியல் வெற்றியை ஈட்டித் தர இருக்கிறது என்கிறார் இயக்குநர் கார்த்தி.


நடிகை ஸ்ரீ திவ்யா நடிகையாக தனக்கு சிறந்த அடையாளத்தைக் கொடுத்த தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுப்பதில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார். தனது கம்பேக் படமான ’ரெய்டு’ திரைப்படம் தனக்கு நடிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித்துள்ளதாகவும் அதில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். தான் ஏற்கனவே விக்ரம் பிரபுவுடன் நடித்தப் படத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது எனக் கூறியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.


எம் ஸ்டுடியோஸ், ஓபன்ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் ஆகியவற்றின் தயாரிப்பாளர்கள் கே கனிஷ்க் & ஜிகே @ ஜி. மணிகண்ணன் ’ரெய்டு’ திரைப்படத்திற்கு அதன் வெளியீட்டிற்கு முன்பிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறியுள்ளார். விக்ரம் பிரபுவின் முந்தைய படங்களான ‘டாணாகாரன்’ மற்றும் ‘இறுகப்பற்று’ ஆகியவற்றின் வெற்றி அவரை குடும்ப பார்வையாளர்களுக்குப் பிடித்தமானவராக மாற்றி இருக்கிறது. இயக்குநர் கார்த்தி ஸ்கிரிப்டாக தங்களிடம் சொன்னதை அவர் அப்படியே திரையில் கொண்டு வந்திருப்பதும் தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறினர்.

No comments:

Post a Comment