Featured post

ARC 33rd National Tenpin Bowling Championships

 ARC 33rd National Tenpin Bowling Championships  25th November – 30th November 2024 Amoeba, Church Street, Bangalore 2nd December 2024 Akaas...

Wednesday, 15 November 2023

சூப்பர் மேன் ஹனு-மான் சூப்பரான ஆந்தம் பாடலுடன் வந்துள்ளார்

 *சூப்பர் மேன் ஹனு-மான் சூப்பரான ஆந்தம் பாடலுடன் வந்துள்ளார் !! இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் ஹனு-மான் படத்திலிருந்து , சூப்பர் மேன் கீதமான ஹனு -மான் பாடல் வெளியாகியுள்ளது !!*


சூப்பர் ஹீரோ திரைப்படங்களை ரசிக்கும்  இந்திய ரசிகர்கள், நமது மண்ணின் சூப்பர் ஹீரோவான ஹனு-மானை   திரையில் தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் ஆர்வமாக உள்ளனர். திரையுலகின் திறமைமிகு இயக்குநர்  பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில், இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா நாயகனாக நடித்திருக்கும் இப்படம் திரைக்கு வர இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்நிலையில் இயக்குநர் பிரசாந்த் வர்மா படம் குறித்தான விளம்பரங்களிலும் தன் தனித்திறமையைக் காட்டி வருகிறார். இப்படத்தின் டீசர் மற்றும் சாலிசா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படக்குழு குழந்தைகள் தினமான இன்று அவர்கள் கொண்டாடும் வகையில், ஹனு மான் சூப்பர் மேன் பாடலை வெளியிட்டுள்ளனர். 


சூப்பர் ஹீரோ ஹனுமானின் இரண்டாவது தனிப்பாடலை வெளியிட,  படக்குழு ஏன் குழந்தைகள் தினத்தைத் தேர்ந்தெடுத்தது என்று பலரும்  ஆச்சரியப்பட்டனர். ஆனால் இப்பாடலைப் பார்த்தவுடன் அனைவருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். சூப்பர் ஹீரோ ஹனுமான் வேடிக்கையானவர், அதே நேரத்தில் சாகசக்காரர். அனுதீப் தேவ் உடைய அற்புத இசையில்,  மதுரகவி பாடல் வரிகளில்,  ஆர்.பி.கிரிஷாங், அஹானா பாலாஜி, சாய்வேதா வாக்தேவி குரல்களில், முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் அனைவரையும் மகிழ்விக்கும் பாடலாக இப்பாடல் வந்துள்ளது. காமிக் வடிவத்தை ஞாபகப்படுத்தி, குழந்தைகளை ஈர்க்கும் வகையில் ஹனு மானின் சாகசங்களை சொல்லும் இப்பாடலை,  குழந்தைகள் அனைவரும் விரும்புவார்கள். இந்த சூப்பர் கீதம் வெளியான வேகத்தில் அனைவரும் கொண்டாட பெரும்  ஹிட்டடித்துள்ளது. 


பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் K நிரஞ்சன் ரெட்டி இப்படத்தைப் பெருமையுடன் தயாரிக்கிறார், ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி லைன் தயாரிப்பாளராகவும், குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். இந்த பிரம்மாண்டமான படைப்பின்,  ஒளிப்பதிவை சிவேந்திரா செய்கிறார்,   ஸ்ரீநாகேந்திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.



இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். 



பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படம் ஹனு-மான் ஆகும். இக்கதை அடிப்படையில் "அஞ்சனாத்ரி" என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கான்செப்ட் உலகளாவியதாக இருப்பதால், உலகம் முழுவதும் சிறப்பாக வரவேற்கப்படும் சாத்தியம் உள்ளது.



ஜனவரி 12, 2024 அன்று தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகள் உட்பட  ஹனு- மான் திரைப்படம் பான் வேர்ல்ட் திரைப்படமாக வெளியாகவுள்ளது.



நடிகர்கள்: தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய் மற்றும் பலர்.


தொழில்நுட்பக் குழு: 


எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: பிரசாந்த் வர்மா 

தயாரிப்பாளர்: K நிரஞ்சன் ரெட்டி 

பேனர்: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் 

வழங்குபவர்: ஸ்ரீமதி சைதன்யா 

திரைக்கதை: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே (Scriptsville)

ஒளிப்பதிவு: தாசரதி சிவேந்திரா 

இசையமைப்பாளர்கள்: அனுதீப் தேவ், ஹரி 

கவுரா, ஜெய் கிரிஷ் மற்றும் கிருஷ்ணா சௌரப் 

எடிட்டர்: எஸ்.பி.ராஜு தலாரி 

நிர்வாக தயாரிப்பாளர்: அஸ்ரின் ரெட்டி வரி 

தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி 

லைன் புரடியூசர்: குஷால் ரெட்டி 

தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீநாகேந்திர தங்காலா 

மக்கள் தொடர்பு : யுவராஜ்

ஆடை வடிவமைப்பாளர்:

 லங்கா சந்தோஷி


https://youtu.be/zniCGNZGUMs?si=5aPvjeb9QIge6t38

No comments:

Post a Comment