Featured post

Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released

 *'Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released* *Vijay Sethupathi Shines as 'Bold Kannan' in the Up...

Tuesday, 14 November 2023

தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியானது, ஜெயம் ரவியின்

 தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியானது,  ஜெயம் ரவியின் “சைரன்” பட டீசர்   !!! 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியான ஜெயம் ரவியின் “சைரன்” படத்தின் டீசர் !!

https://youtu.be/V7BBKpDtxLo

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான  “சைரன்” படத்தின் டீசர்,  தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. 


தமிழ் திரையுலகில், தனித்துவமான ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி. தொடர் வெற்றிப்படங்களாகத் தந்து வரும் ஜெயம் ரவியின் தன் திரை வாழ்க்கையில், முதல் முறையாக சைரன் படத்தில்  சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றுகிறார். 


சைரன் படத்தின் துவக்கத்திலிருந்து ஒவ்வொரு அறிவிப்பிலும் படத்தின் மையம் ஒவ்வொரு கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் சைரனுடன் செல்லும் ஒரு ஆம்புலன்ஸின் புகைப்படம் டைட்டிலோடு வெளியானது. பின் முதிர்ந்த தோற்றத்தில் கைதியாக ஜெயம் ரவி கதாபாத்திரத்தின் தோற்றம் பிரிஃபேஸ் லுக்காக வெளியானது. தற்போது வெளியாகியுள்ள டீசர். சிறையிலிருக்கும் ஜெயம் ரவி கதாபாத்திரம் பரோலில் வெளிவருவதைக் காட்டுகிறது.  


ஜெயிலில் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி பாத்திரத்தின் குரலில் ஒரு கதையும்,  போலீஸாக வரும் கீர்த்தி சுரேஷ் குரலில் ஒரு கதையும் என இந்த டீசர் இரண்டு கதாபாத்திரங்களின் குரலில் மொத்தப்படத்தின் மையக்கதையை விவரிக்கிறது. பரபரப்பான திருப்பங்களுடன்,  மாறுபட்ட கதைக்களத்தில், ஜெயம் ரவியின் வித்தியாசமான தோற்றத்தில் வெளியாகியிருக்கும் இந்த டீசர்,  படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது. 


இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 


மிகப்பிரமாண்ட பொருட்செலவில்,  குடும்ப அம்சங்கள்  நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில்  நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.  காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 


படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 


தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் 


எழுத்து இயக்கம் - ஆண்டனி பாக்யராஜ் தயாரிப்பு - சுஜாதா விஜய்குமார் 

இணை தயாரிப்பாளர்: அனுஷா விஜய்குமார் 

இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: செல்வகுமார் S.K

எடிட்டர்: ரூபன் 

தயாரிப்பு வடிவமைப்பாளர்: கே.கதிர் 

கலை இயக்குனர்: சக்தி வெங்கட்ராஜ் M 

சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன் 

பாடல் நடன அமைப்பாளர்: பிருந்தா 

ஆடை வடிவமைப்பாளர்: அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேத்தா, நித்யா வெங்கடேசன் 

ஒலி வடிவமைப்பாளர்: சுரேன் G அழகியகூத்தன் S 

ஒப்பனை: மாரியப்பன் 

ஆடைகள்: பெருமாள் செல்வம் 

VFX : டிடிஎம் லவன் குசன் 

வண்ணம்: பிரசாத் சோமசேகர் 

DI: நாக் ஸ்டுடியோஸ் 

ஸ்டில்ஸ் : கோமளம் ரஞ்சித் 

நிர்வாக தயாரிப்பாளர்: ஓமர் 

தயாரிப்பு நிர்வாகி: சக்கரத்தாழ்வார் G 

தயாரிப்பு மேலாளர்: அஸ்கர் அலி 

புரமோசன் ஹெட் - ஷ்யாம்

மக்கள் தொடர்பு: சதீஷ், சிவா (AIM) 

மோஷன் போஸ்டர்: வெங்கி (வெங்கி ஸ்டுடியோஸ்).

No comments:

Post a Comment