Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Monday, 6 November 2023

இந்திய சினிமாவில் இரண்டு பெண்கள் மோதும் இதுபோன்ற ஒரு

 *“இந்திய சினிமாவில் இரண்டு பெண்கள் மோதும் இதுபோன்ற ஒரு சண்டைக்காட்சி இருந்திருக்கிறது என நினைத்துக்கூட பார்க்கவில்லை” ; கத்ரீனா கைப்*



பாலிவுட் சூப்பர்ஸ்டார் கத்ரீனா கைப் யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸின் முதல் பெண் உளவாளி. அந்தவிதமாக ‘டைகர் 3’ படத்தில் இடம்பெறும் உயிரை பணயம் வைக்கும் சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்காக தனது உடலை மீண்டும் ஒருமுறை கட்டுக்கோப்பாக’ மாற்றியுள்ளார். 


‘டைகர் 3’ படத்தில் துருக்கி குளியலறையில் அவருடைய டவல் சண்டைக்காட்சி இணையத்தில் வைரலாக ஆனது. சினிமாவில் ஒரு ஹீரோவை போல ஒரு பெண்ணும் எப்படி சண்டையிட முடியும் என்பதை காட்டியதற்காகவே இந்தப்படத்தை தான் மிகவும் விரும்புவதாக கத்ரீனா கூறியுள்ளார்.  


கத்ரீனா கூறும்போது, “ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்கு நான் மிகவும் விரும்புகிறேன். அந்தவகையில் டைகர் வரிசை படங்கள், எப்போதுமே ஒரு பெண் ஆக்சன் ஹீரோயின் என வரும்போது பல விஷயங்களில் மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்து செல்லும் விதமாக அந்த வாய்ப்பை எனக்கு அளித்திருக்கின்றன. சோயாவின் வாயிலாக ஒரு சூப்பர் உளவாளியின் வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கிறேன் என்பதுடன் எதிரிக்கு அவள் ஒரு நரகம் என்கிற உண்மையையும் நான் ரசிக்கிறேன். டைகரைப் போலவே எதையும் அழகாக சமாளிக்க முடியும் என்பது மட்டுமல்ல, அவளால் கடைசி வரை நின்று போராடவும் முடியும். ஒரு ஆணைப்போலவே பெண்ணும் சரிசமமாக சண்டையிட முடியும் என்பதை பார்க்க முடியும்போது அது எனக்கும் பார்வையாளர்களுக்கும் புதிதாகவும் உற்சாகமாகவும் இருக்கும்” என்கிறார்.


அவர் மேலும் கூறும்போது, “டைகர் 3’யின் குளியலறை சண்டைக்காட்சி பெரிய அளவில் வைரலாகும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு குளியலறைக்குள் அடிப்பது, தாவிக்குதிப்பது, குத்துக்களை விடுவது, உதைப்பது என ஒருவருக்கொருவர் மோதும் சண்டைக்காட்சியை படமாக்குவதற்கு மிகமிக கடினமாக இருந்தது. இப்படி ஒரு புத்திசாலித்தனமான காட்சியை யோசித்ததற்காகவே ஆதிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். காரணம் இந்திய சினிமாவில் இப்படி இரண்டு பெண்கள் மோதும் சண்டைக்காட்சி இருக்கிறதா என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இயக்குனர் மனீஷும் சண்டைப்பயிற்சி குழுவும் ஒவ்வொன்றையும் நம்பமுடியாத வகையில் விலாவாரியாக செயல்படுத்தி இருக்கிறார்கள். மக்களால் பார்த்து ரசிக்கப்படும் இவை அனைத்தும் ஒட்டுமொத்த குழுவினரின் உழைப்பு. ஒரு திறமையான சண்டைக்காரி கதாபாத்திரத்தில் நடித்துல் மிஷ்ஷெல் லீயுடன் சோயா மோதும் காட்சியில் நிச்சயமாக அதன் தீவிரம், ஆக்கிரமிப்பு, மிருகத்தனம் எல்லாம் படம் பார்ப்பவர்களை மூச்சுத்திணற வைக்கும்.  சினிமாவில் ஒரு பெண் இந்த அளவுக்கு சண்டையிட்டு பார்த்திராததால் இது என்னுடைய மிகச்சிறந்த சண்டைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும். இது ரொம்பவே எளிமையான ஆனால் தைரியமான ஒன்று என்பதால் மக்கள் இந்த முழு ஆக்சன் காட்சியை திரையரங்குகளில் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது” என்கிறார்.  


‘டைகர் 3’யில் டைகராக நடித்துள்ள சல்மான் கானுக்கு ஜோடியாக சோயா என்கிற சூப்பர் உளவாளி கதாபாத்திரத்தில் மீண்டும் கத்ரீனா நடித்திருக்கிறார். ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கியுள்ள இந்த ‘டைகர் 3’ ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளி ரிலீஸாக வரும் நவ-12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


https://www.instagram.com/p/CzS3IRDNxn2/?igshid=MzRlODBiNWFlZA==

No comments:

Post a Comment